படைப்பு நோக்கமறியாத படகுகள்

அவனி மாடசாமியின் கவிதைகள் சில….

நீரில் மூழ்காதிருப்பது படகின் வடிவமைப்பு நோக்கம்;

பளு தாங்குவதும் , பயணிப்பதும் படைப்பின் நோக்கம்;

நீர் பரப்பின் நிலை மாறுதலில் தடுமாறும்; புவி ஈர்ப்பு விசையில் சமன் செய்யும்;

பயண நோக்கு விதிகள் படகுகளுக்கு இல்லை;

காற்றின் திசையும் – விசையும் படகின் திசை தீர்மானிக்கும்;

வளி மண்டல அழுத்தமும், புவி ஈர்ப்பு விசையும் படகின் இயக்க காரணிகளாகும்;

பேரலையும், பெருங்காற்றும் படகின் பிடிமானமில்லா பொருட்கள் விலக்கும்; பயண பயன்பாட்டு பொருட்களின் பிடிமானம் இறுக்கும்;

மாலுமிகள் மாற்றம் பயணத்தின் கட்டாயம்;

உடல் தோன்றலும் – உயிர் இருத்தலின் அவசியமும் பொருளாதார புத்தி சேகரிப்பில் புலப்படாத உண்மைகள் !

அவனி மாடசாமி