பணம்… ஆடம்பரம்… விபச்சாரத்தில் தள்ளப்பட்ட குடும்ப பெண்கள்!

சென்னை: பணம், ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என ஆசை காட்டி, குடும்ப பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கணவன்–மனைவி காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். பொள்ளாச்சியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூளேஸ் வரன்பட்டி ஏர்பதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (42). இவரது மனைவி கதிக பீவி (47). இவர்கள் பொள்ளாச்சி–கோட்டூர் சாலையில் சி.டி.கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் உதவி கேட்டு வரும் இளம் பெண்களிடம் விபச்சாரத்தில் ஈடுபட்டால் பணம் மற்றும் ஆடம்பரமாக வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். சில பெண்கள் இதற்கு மறுத்து ஒதுங்கியுள்ளனர்.

ஆனால் வறுமை மற்றும் ஆடம்பர ஆசையால் சில குடும்ப பெண்கள் ஜாகீர் உசேன்–கதிக பீவி வீசிய வலையில் விழுந்துள்ளனர். அவர்களை இந்த தம்பதி, விபச்சாரத்தில் தள்ளியதோடு, தங்கள் வீட்டிலேயே அந்த தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். சொந்த வீடு என்பதால் எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை.

விபச்சாரத்துக்கு பெண்களை தயார்படுத்திய தம்பதிக்கு, வாடிக்கையாளர்களை வளைத்துப்போட அவர்கள் நடத்திய சி.டி. கடை கை கொடுத்துள்ளது. சி.டி. கடைக்கு புதுப்படம் மற்றும் ஆபாச படங்களை கேட்டு வரும் வாடிக்கையாளர்களை கண்காணித்தனர். அதில் அதிக ஆபாச படங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் நைசாக பேசி, “எதற்கு சி.டி.யை பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்களிடம் குடும்ப பெண்கள் உள்ளனர். பணம் கொடுத்தால் எங்கள் வீட்டிலேயே அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சி.டி.கடை வாடிக்கையாளர்கள் ஜாகீர் உசேனின் வீட்டுக்கு விபசார வாடிக்கையாளர்களாக படையெடுத்துள்ளனர். சொந்த வீடு என்பதால் அவர்களை எங்கள் உறவினர் என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறி சமாளித்துள்ளனர். விபச்சாரத்தொழில் கொடி கட்டி பறந்தது.

மேலும் பல குடும்ப பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களையும் விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். இதனால் ஜாகீர் உசேன்– கதிக பீவி தம்பதியினரின் வீட்டில் பணம் மழை கொட்டியது. கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் வாரி வழங்கியுள்ளனர்.

நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகம் வரவே, தம்பதியின் வீடு எப்போதும் பரபரப்பாகவே இருந்தது. இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் தொடர்ந்து குவிந்து கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் போனது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

வீட்டில் விபசாரம் நடப்பதை உறுதி செய்த காவல்துறையினர், அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். காவல்துறையினர் சுற்றி வளைத்ததை அறிந்து அங்கிருந்த பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், ஜாகீர் உசேன், அவரது மனைவி கதிக பீவி சிக்கிக் கொண்டனர். அப்போது, குடும்ப பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதை ஒப்புக்கொண்ட தம்பதியை காவல்துறையினர் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதால் விபசாரத்தில் ஈடுபட்ட குடும்ப பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.