பணம் கொடுக்காத ஆலைக்கு சீல்!

[wysija_form id=”1″]

அதிகாரிகள் மற்றும் ஆலைக்காரர்களால் அப்பாவி விவசாயிகள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது பற்றி, இப் பகுதியில் பார்த்து வருகிறோம். இந்நிலையில் விவசாயிகளுக்கு நியாயமான ஆதார விலையைத் தராத காரணத்தால், பெண்ணா டத்தில் இயங்கி வரும் தனியார் ஆலையான அம்பிகா சர்க்கரை ஆலைக்கு ‘சீல்’ வைத்து இருக்கிறது, கடலூர் மாவட்ட நிர்வாகம். அதுபற்றி இங்கே பார்ப்போம்.

இந்தப் பிரச்னை பற்றிப் பேசிய வெலிங்டன் பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சோமசுந்தரம், ”நடப்பு கரும்புப் பருவத்துக்கு (2013-2014) மத்திய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான 2 ஆயிரத்து 100 ரூபாயோடு, 150 ரூபாய் சேர்த்து, 2 ஆயிரத்து 250 ரூபாய் வழங்கிவிட்டு… மாநில அரசின் பரிந்துரை விலையான 450 ரூபாயில் 300 ரூபாயை பாக்கி வைத்திருக்கின்றன, தனியார் ஆலைகள். இந்தப் பிரச்னை மட்டும்தான், பலவிதமான போராட்டங்கள் மூலமாக வெளியில் தெரிகிறது. ஆனால், பெண்ணாடத்தில் இருக்கும் அம்பிகா சர்க்கரை ஆலை, மத்திய அரசின் ஆதாய விலையிலேயே பாக்கி வைத்திருக்கும் விஷயம் வெளிவரவேயில்லை.

தமிழகம் முழுவதிலும் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் பைசா பாக்கி இல்லாமல், கரும்புக்கான தொகையை வழங்கி விட்டன. ஆனால், மொத்தமுள்ள 25 தனி யார் சர்க்கரை ஆலைகளில், பெரம்பலூரில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையைத் தவிர மற்ற ஆலைகள் மாநில அரசின் பரிந்துரை விலையில் பாக்கி வைத்துள்ளன. அம்பிகா சர்க்கரை ஆலை, மார்ச் 27-ம் தேதி வரையில் வெட்டப்பட்ட கரும்புகளுக்கு மத்திய அரசின் ஆதாய விலையை மட்டும் வழங்கியுள்ளது. அதற்குப்பிறகு வெட்டிய கரும்புகளுக்கு ஒரு பைசாகூட வழங்காமல் பாக்கி வைத்துள்ளது.

இந்தப் பருவத்தில் 5 லட்சத்து 90 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதாயவிலை மற்றும் மாநில அரசின் பரிந்துரை விலை இரண்டையும் சேர்த்து, மொத்தம் 42 கோடி ரூபாயை பாக்கி வைத்திருக்கிறது, அம்பிகா ஆலை நிர்வாகம். இதில்லாமல் வட்டிக்கான பாக்கியும் கோடிக்கணக்கில் உள்ளது. இதனால், விவசாயிகள் கடும்துன்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதற்காக பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பல தடவை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, ஜூன் 6-ம் தேதி தொழில்துறை அமைச்சர் முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், அம்பிகா சர்க்கரை ஆலை தரப்பில், ஜூலை 25-ம் தேதிக்குள் பாக்கித் தொகையை வழங்கிவிடுவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், பணம் வழங்கவில்லை. ஆகஸ்ட் 10-ம் தேதி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், ஆகஸ்ட் 20-ம் தேதி வரை கெடு கொடுக்கப்பட்டது. அந்த தேதியிலும் பணம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தான், ‘நிலவருவாய் மீட்புச் சட்ட’த்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில், அம்பிகா சர்க்கரை ஆலையின் சர்க் கரை இருப்பு வைக்கப் பட்டிருந்த குடோனை மூடி சீல் வைத்துள்ளார் விருத்தாசலம் கோட்ட ஆட்சியர் உதயகுமார். இந்த நடவடிக்கை காலதாமதமாக எடுக்கப்பட்டிருந்தாலும், இதை கரும்பு விவசாயிகள் முழுமனதோடு வரவேற்கிறோம். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை உரிய நேரத்தில் தராமல் இழுத் தடிக்கும் மற்ற சர்க்கரை ஆலை களுக்கு இது ஓர் எச்சரிக்கையாக இருக்கும்” என்று சொன்னார்.

ஆலை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பேசிய கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், ”மத்திய அரசு அறிவித்த ஆதாய விலையை வழங்க பலமுறை வாய்ப்புகள் கொடுத்தும் வழங்காததால் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்காத ஆலைகள் மீது இச்சட்டத் தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. அதேசமயம், மாநில அரசின் பரிந்துரை விலையைத் தராத ஆலைகளை அப்படியே விட்டுவைத்திருக்க முடியாது. உரிய வகையில் அத்தகைய ஆலைகளுக்கு நெருக்கடி கொடுத்து, அவர்கள் தரவேண்டிய தொகையையும் விவசாயிகளுக்கு கிடைப்பதற் கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்” என்று அக்கறையுடன் சொன்னார்.

நன்றி விகடன்

FOLLOW OUR DOMAIN VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

[wysija_form id=”1″]

VISIT OUR GROUP OF DOMAINS

EDITOR – www.tamilagamtimes. com

http://yazhinimaran.com/ FOR MEDICAL ARTICLES
http://isaipriyanka.com/ FOR ECONOMICAL ARTICLES
https://kaviazhaku.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES
http://shanthivinayagam.com/ FOR WOMEN
http://alagusundari.com/ FOR SPIRITUAL