பயனுற்றதும் – பயனற்றதும்

வீடு பெருக்கினேன்

சுத்தமானது வீடு

குப்பையை தள்ளி

முற்றத்திற்கு வந்தேன்

தெருவிலும் குப்பை

சலிக்காமல் பெருக்கி

சுத்தம் தெருவை தின்று

முடிக்கையில்…

ஆரம்பமானது மற்றுமோர் தெரு

மற்றுமோர் ஊர்

என விரிந்ததால்

ஆத்திரத்தில்

விளக்குமாறை வீசி விட்டு

வீட்டிற்குள் நகர்ந்தேன்

எங்கு தொடங்குவது ?

எங்கு முடிப்பது ?

உண்மையில் குப்பை உள்ளதா ?

எனத் தேடும் நானும் குப்பையாவேனோ ?

K.K. கண்ணன் , மதுரை