பழுதடைந்த பேருந்திலா தொடர்ந்து பயணிப்பது ?

பழுதடைந்த பேருந்திலா தொடர்ந்து பயணிப்பது ?

image

உழைப்பை மறுக்கும் சோம்பல் ; விழிப்புணர்வு இல்லாத பழைய சித்தாந்த நீட்சியான அறிவு,

மறுபதிப்பான வாழ்க்கை முறை ; சுய வெறுப்பூட்டும் உள் மனப் போராட்டம்,

பொருளாதார போலி முகம் உருவாக்கும் சிந்தனை பிம்பம்;

கருத்து பிரியங்களால் கலவையான மூளை;

சுயவாசனை அறியா சிந்தனை நாசிகள்;

சுயமொழி மறுத்து தன் ஒலி கூட்டும் சுய நல வேட்கை;

பொது நலமில்லாத இரை தேடல் தந்திரம்;

பொருள் தேடும் களத்தில் பொய்யுரை பரப்பும் சாமர்த்திய ஞானம்;

பருவமறியாமல் பூக்கும் இளம் காதல் ஞாபகம் ;

உடலை கருவியாக்கி பணத்தை இலக்காக்கும் வாழ்வியல் மூளை;

இந்த பழுதடைந்த உடல் பேருந்தில் தன் அமர்வுக்கு இடமின்றி இருக்கை தேடும் ஆன்மா ?