பாதுகாப்பான ஏற்றுமதிக்கு இன்ஷூரன்ஸ் அவசியம்!

TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us pickyourbookz@gmail.com

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS

ஏற்றுமதியைப் பாதுகாப்பாகச் செய்வதன் மூலம் நிறைய லாபம் பார்க்க முடியும். ஏற்றுமதியைப்  பாதுகாப்பாகச் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அதில், முக்கியமானது, இன்ஷூரன்ஸ். ஏற்றுமதிக்கான இன்ஷூரன்ஸை எப்படி எடுப்பது, சிறிய அளவில் தொழில் செய்யும் எஸ்எம்இ-களுக்கு இந்த இன்ஷூரன்ஸ் எப்படி பாதுகாப்பு அளிக்கும், எதற்கெல்லாம் இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்யலாம், எதற்கெல்லாம் செய்ய முடியாது என்பது குறித்து சென்னையில் உள்ள இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழக மேலாளர் ஜோதி பிரசாத்திடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

”முதலில் எஸ்எம்இ-கள் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ‘நான் சிறிய அளவில்தான் ஏற்றுமதி செய்கிறேன். இதற்கு ஏன் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். அது எனக்கு வீண் செலவுதானே’ என்று சில எஸ்எம்இ-கள் நினைக்கின்றனர். இந்த எண்ணத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் என்பது ஏற்றுமதியாளருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும், எஸ்எம்இ ஏற்றுமதியாளருக்கு இன்ஷூரன்ஸ் மிகவும் அவசியம். ஏனெனில், இவர்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்கள் வாங்குபவரைச் சென்றடைந்தபின்பே பணம் கைக்கு வரும் என்ற நிலை உள்ளதால், இதில் இருக்கும் ரிஸ்க் சற்று அதிகம். அதனால் எஸ்எம்இ-கள் இன்ஷூரன்ஸ் செய்வது மிகவும் அவசியம்.

ஏற்றுமதி இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையானது எஸ்எம்இ-களுக்கான உற்பத்தித்திறன், அவர்களது ஷிப்மென்ட் அளவு, ஓர் ஆண்டுக்கு எத்தனை முறை ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது என்பதையெல்லாம் வைத்தே தரப்படும். மேலும், வாங்குபவரது கிரெடிட் அளவைப் பொறுத்தும் எடுக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர் ஒருவர் ஏற்றுமதி செய்ய ஆர்டர் கிடைத்தவுடன் ஏற்றுமதிக்கான இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி தனது ஆவணங்களைக் காட்டி இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். ஏற்றுமதியாளரது ஆவணங்களைச் சரிபார்த்தவுடன் ஆர்டர் தந்த வெளிநாட்டு நிறுவனத்தை ஏஜென்சி மூலம் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சரிபார்த்த பின்னரே இன்ஷூரன்ஸ் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஏனெனில், ஆர்டர் தந்த நிறுவனம் சரியான நிதிநிலையில் இல்லையெனில், ஏற்றுமதியாளருக்கு அந்த நிறுவனத்தின் நிலையையும், அதன் மீது இன்ஷூரன்ஸ் எடுக்க இயலாது என்பதையும் கூறுவோம்.

ஏன் அவசியம்?

ஏற்றுமதி என்பது ஒரு ரிஸ்க் நிறைந்த வர்த்தகம். ஏனெனில், ஆர்டர் தரும் நிறுவனம், அவர் வசிக்கும் நாடு என பல விஷயங்கள் உள்ளதால், இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு இன்ஷூரன்ஸ் செய்ய வேண்டும். இதை நாம் கவனிக்கத் தவறும்பட்சத்தில் இரண்டு விதமான ரிஸ்க் உள்ளதை உணரலாம்.

முதலாவது, அரசியல்ரீதியான ரிஸ்க். அதாவது, நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருள், குறிப்பிட்ட ஒரு நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் கையில் சென்றடைய ஒரு மாத காலம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். இடைப்பட்ட காலத்தில் அந்தப் பொருளை ஏற்றுமதியாகும் நாட்டின் அரசாங்கம் தடை செய்தால், அதன் மூலம் ஏற்படும் நஷ்டத்திலிருந்து தப்பிக்க இந்த இன்ஷூரன்ஸ் உதவும். இதேபோன்று, ஏதாவது உள்நாட்டு பிரச்னை அல்லது தற்போது ஈராக்கில் ஏற்பட்டுள்ளதுபோல ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதனால் ஏற்படும் நஷ்டத்துக்கான இழப்பீட்டை இன்ஷூரன்ஸ் நிறுவனம் தந்துவிடும். இதன்மூலம் அந்த இழப்பிலிருந்து நாம் எளிதாக வெளியே வந்துவிட முடியும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு பாதையில் செல்ல வேண்டிய பொருட்கள் வேறு பாதையில் செல்லும்போது, அதிகச் செலவு செய்ய வேண்டியிருந்தால் அதற்கு ஆகும் செலவையும்  இன்ஷூரன்ஸ் நிறுவனமே எடுத்துக்கொள்ளும். எஸ்எம்இ-கள் மற்ற எதற்கு இன்ஷூரன்ஸ் செய்கிறார்களோ இல்லையோ, இதற்காகவாவது கட்டாயம் இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம். காரணம், இந்தப் பிரச்னைக்கு வாங்குபவரோ அல்லது ஏற்றுமதியாளரோ பொறுப்பேற்க முடியாது. இது அந்த நாட்டில் நிலவும் சூழலைப் பொறுத்தது. அதனால் இதற்கு இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்வதில் எந்தத் தடையும் இருக்காது. ஆனால், ஒரு பொருள் ஏற்றுமதியாகாமல் தயாரிக்கப்பட்ட நாட்டிலேயே இருக்கிறது என்றால், அதற்கு இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்வது சற்று கடினமான ஒன்றாக இருக்கும்.

இரண்டாவதாக, பொதுவான ரிஸ்க்குகள். இது ஏற்றுமதியாளரையும், வாங்குபவரையும் பொறுத்தது. இதில், பொருளை வாங்குபவர் திடீரென தன் தொழிலை செய்ய முடியாத சூழலுக்குச் சென்றாலோ அல்லது வாங்குபவரால் பொருட்கள் நிராகரிக்கப்பட்டாலோ இன்ஷூரன்ஸ் மூலம் இழப்பீட்டைப் பெறமுடியும். அதுமட்டுமின்றி, லெட்டர் ஆஃப் கிரெடிட் வழங்கிய வங்கி, மோசமான நிலைக்குச் சென்று பணத்தை வழங்க முடியாத நிலைக்குச் சென்றாலும் இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்ய முடியும்!

எதற்கு க்ளைம் கிடைக்காது?

1. சரியான தரத்தில் பொருட்கள் தயாரிக்கப்படாமல் வாங்குபவரால் நிராகரிக்கப்பட்டால் க்ளைம் செய்ய முடியாது.

2. சரியான நேரத்தில் பொருட்களை அனுப்பாமல் அல்லது வாங்குபருக்கு சொன்ன தேதியில் பொருட்கள் வந்துசேராமல் போகும்போது அதனால் வாங்குபவர் நிராகரித்திருந்தால் க்ளைம் செய்ய முடியாது.

3. ஆர்டர் என்பது நேரடியாக ஏற்றுமதியாளர் பெயரில் இருந்தால் மட்டுமே க்ளைம் கிடைக்கும்.  ஏஜென்ட்டின் பெயரில் இருக்கக் கூடாது. அப்படி இருந்து, ஏதாவது பிரச்னை உண்டானால் க்ளைம் செய்ய முடியாது. அதேபோல, சில ஏற்றுமதி ஆர்டர்கள் ஏஜென்ட் மூலம் பணம் பெறுமாறு இருக்கும். அதில் பிரச்னை வந்தாலும் க்ளைம் செய்ய முடியாது.

எங்களிடம் வருபவர்களில் சிலர், ‘நான் நன்றாகத் தொழில் செய்கிறேன். வாங்குபவரதுமேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் நான் தேவையில்லாமல் பிரீமியம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை’ என ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பார்கள். அவர்கள் தொழிலில் பாதிப்பு ஏற்படாதவரை நன்றாக இருக்கும். ஆனால், ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதனால் அவர்கள் சந்திக்கும் நஷ்டம் இவர்கள் இன்ஷூரன்ஸுக்குச் செலவழிக்கும் தொகையைவிடப் பல மடங்கு இருக்கும். அதனால் இன்ஷூரன்ஸ் என்பதைச் செலவாகப் பார்க்காமல், பாதுகாப்புக்கான முதலீடாகப் பார்த்தால் லாபம் பெறலாம்” என்றார்.

இனியாவது எஸ்இஎம்-கள் இன்ஷூரன்ஸ் விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும்!

படம்: க.பாலாஜி.


எனக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், என்ன தொழில் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இதற்கு நல்ல ஆலோசனை தேவை!

@ விக்னேஷ்குமார்.

வாசகரது இந்தக் கேள்விக்கு சென்னை மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் அளித்த பதில் இனி:

‘ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொழில் மையம் இருக்கிறது. அதில் புதிதாகத் தொழில் தொடங்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, என்ன தொழில் செய்ய வேண்டும் என நூற்றுக்கணக்கான தொழில்களுக்குரிய பயிற்சியும், ஆலோசனையும் வழங்கப்படுகிறது. மேலும், நீங்கள் தொடங்கும் தொழிலுக்கான மானியங்களைப் பெறுவதற்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதனால் மாவட்ட தொழில் மையத்தை அணுகினாலே போதும்; நீங்கள் என்ன தொழில் செய்ய வேண்டும் என்கிற விவரம் கிடைத்துவிடும்.”

ஸ்டார் SME

”லாபகரமாகத் தொழில் செய்கிறேன்!”

மாரீஸ்வரன், சன்ஷைன் இண்டஸ்ட்ரீஸ், மதுரை.

”நான் 18 வருடங்களாக இரும்பு க்ளாம்ப்கள் மற்றும் பெரிய நிறுவனங் களுக்கு இரும்பைக் கொண்டு தயாரிக்கப்படும் உதிரிபாகங்கள் செய்துதரும் தொழிலை செய்து வருகிறேன். மதுரையில் இந்தத் தொழில் செய்யும் பெரிய நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் இதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒரு வாரத்துக்கு சுமார் 35 டன் என்ற அளவில் உற்பத்தி செய்கிறோம். மேலும், பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர போர்டுகள் வைக்கும் இரும்பு பெட்டி போன்றவற்றையும் செய்து வருகிறோம்.

வருடத்துக்குச் சுமார் 18-20 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இந்தத் தொழிலுக்கு ஆட்களும், வாய்ப்புகளும் சரியாகக் கிடைப்பதால், லாபகரமாகத் தொழில் செய்ய முடிகிறது. சரியான நேரத்தில் ஆர்டர்களை செய்து முடித்து டெலிவரி வழங்குவதும், சரியான தரத்தில் வழங்குவதும்தான் நல்ல பெயர் ஏற்படுத்திக்கொடுக்கும். புதிதாக வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்கிறோம். அப்போதுதான் வாடிக்கையாளர்களும், ஆர்டர் தருபவர்களும் கேட்கிற தரத்தில் பொருட்களை வழங்கமுடியும்.”

நன்றி விகடன்

FOLLOW OUR BLOG VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us pickyourbookz@gmail.com

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS

VISIT OUR GROUP OF DOMAINS
EDITOR – www.tamilagamtimes. com
CONTACT : pickyourbookz@gmail.com

http://pickyourbooks.wordpress.com/ FOR COLLEGE E BOOKS

http://yazhinimaran.wordpress.com/ FOR MEDICAL ARTICLES

http://isaipriyanka.wordpress.com/ FOR ECONOMICAL ARTICLES

https://kaviazhaku.wordpress.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES

http://shanthivinayagam.wordpress.com/ FOR WOMEN

http://alagusundari.wordpress.com/ FOR SPIRITUAL

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS