‘பிரதர்… நாங்க உங்களுக்காக தான் பாடுறோம்’

[wysija_form id=”1″]’’காற்றில் வரும் கீதமே’’…என மேடையிலிருந்து ஒலிக்கும் பாடல் மனதை வருட, பார்வையாளர்கள் வரிசையில் ஒட்டுமொத்த கூட்டமும்  மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. http://tamilagamtimes.com/?post_type=product

பெண்களுக்கு சவால் விடுக்கும் பல தொழில்களில் ஒன்று இசைக் கச்சேரிகளில் பாடுவது. நேரிடையாக பார்வையாளர்களை சந்திக்க வேண்டிய சூழலில் ஒரு பெண்ணாய் அதை எதிர்கொள்வது பெரும் சிரமம்.

துணிவும் திறமையோடும் அதை வெற்றிகரமாக்கியிருக்கிறார் அபி பாக்யராஜ். இசைக்குழு பாடகி என்பதையும் தாண்டி ’அபி சவுண்ட்ஸ் குட்’ (Abi’s sounds good)   என்னும் இசைக்குழுவினை நடத்திவரும் பெண்மணி.http://tamilagamtimes.com/?post_type=product

‘’என்னோட 5 வயசுல இருந்து பாட்டு கத்துட்டு இருக்கேன். இசைதான் என்னோட மூச்சு… பாட ஆரம்பிச்சு 18 வருஷங்களை கடந்தாச்சு!” என அழகான அறிமுகம் கொடுத்து பேசுகிறார் அபி.http://tamilagamtimes.com/?post_type=product

‘’பொதுவாவே பெண்கள்னாவே இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாதுன்னு எல்லைக்கோடுகள் நிறையவே இருக்கும். ஆனா ஒரு பெண் நினைச்சா அது எந்த துறையா இருந்தாலும் அதுல எந்த விதமான களங்கமும் இல்லாம அதுல அழகா ஜெயிச்சுக் காட்ட முடியும்ங்கறது என் எண்ணம். என் கணவருக்கும் என்னைப் போலவே இசையில் ஈடுபாடு அதிகம். மியூசிக் ஸ்கூல் நடத்திட்டு வர்றார்.

ஏதாவது சாதிக்கனும்னு தொடர்ந்து எனக்குள்ள ஒரு வெறி இருந்துட்டே இருந்துச்சு. கணவரோட முழு ஆத ரவோட 2009 ல் அபி சவுண்ட்ஸ் குட்’ன்னு இசைக்குழு ஆரம்பிச்சேன். பொதுவாவே திருமணங்கள்ல http://tamilagamtimes.com/?post_type=product
கச்சேரின்னா இரைச்சல் அதிகமா இருக்குறதா ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனா எங்க குழுவோட நோக்கமே இரைச்சல் இல்லாத மெல்லிய ஆத்ம இசையை கொடுக்கனும்ங்கிறது தான். கண்டிப்பா குத்துப் பாட்டு பாடுறதே இல்லைன்னு குறிக்கோள் வச்சிருக்கோம்.

சில சமயம் இசைக் கச்சேரிகள்ல பாடும்போது சில ஆண்கள் குடிச்சுட்டு பெண் பாடகிகளை இழிவா பேசுறது நடக்கும். எங்க இசைக் குழுவுல ஆபாசமான பாடல்கள் இல்லாததால இந்த மாதிரியான பிரச்னைகள் வருவது கிடையாது. அதையும் மீறி  பிரச்னை வந்தா, உடனே மைக்கில் ‘பிரதர் நாங்க உங்களுக்காகதான் பாடுறோம்’னு சொல்லிட்டா போதும்…ஆண்கள் அவங்களுக்கான பொறுப்புணர்ச்சியை உணர்ந்துட்டு அமைதியாடுவாங்க.http://tamilagamtimes.com/?post_type=product

http://tamilagamtimes.com/?post_type=product

இந்த 5 வருடங்கள்ல 700 மேடைகள்ல பாடியிருக்கோம். இசைக்கருவிகள் மட்டும் பயன்படுத்துற மாதிரி யான இசை நிகழ்ச்சிகளும் நிறைய  பண்ணிட்டு இருக்கோம். வெளி மாநிலங்கள்லயும் நிறைய நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருக்கேன்.
http://tamilagamtimes.com/?post_type=product
மனதுக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே வாழ்க்கையா அமையும்போது வாழ்க்கை அத்தனை சுவாரஸ்யமா மாறிடும். அதை நான் ஒரு பாடகியா உணர்ந்திருக்கேன்“ என்று நெகிழும் அபி, ஒரு பெண்ணாய் இந்த இசைக்குழுவை கம்பீரமாய் நடத்துறதுல அவ்வளவு ஆத்ம திருப்தி எனக்கு’’கண்களில் பெரும் பூரிப்புடன் விடைகொடுக்கிறார்.http://tamilagamtimes.com/?post_type=product

[wysija_form id=”1″]