“பிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்!”

[wysija_form id=”1″]நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த சர்ச்சை அரசியலாகி இருக்கும் சூழலில், ”இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும்” என்ற போஸ்டர்கள் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. அந்த போஸ்டரில், நேதாஜி, பிரபாகரன் ஆகியோருடைய படங்களுடன் நரேந்திர மோடி, கருணாநிதி ஆகியோரின் படங்களும் இடம்பெற்று இருப்பதால், அது தமிழக அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.

Negotiating Sales

‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணி  தமிழ்நாடு’ என்ற அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்ட அந்தச் சுவரொட்டிகளில், ‘இந்திய தேசிய தலைவர் நேதாஜியின் 118-வது பிறந்தநாளிலும் அவர் குறித்து நீடிக்கும் மர்மங்களை நரேந்திர மோடி அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட வேண்டும்” என்ற வாசகங்கள் இடம்பெற்று உள்ளன.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளரான வியனரசுவிடம் பேசினோம்.  ”2005-ல் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்‌ஷே வெற்றி பெற்றவுடன் விடுதலைப்புலிகளை அழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற நினைத்தார். ஆனால், அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டது. கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் மீது இருந்த வெறுப்பு உணர்வையும் அப்போது தி.மு.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் பலகீனங்களையும் புரிந்துகொண்ட காரணத்தினாலேயே ராஜபக்‌ஷேவால் உள்நாட்டுப் போரை தொடங்க முடிந்தது.Negotiating Sales

2008 மார்ச் 10-ம் தேதி வேலூர் சிறையில் இருந்த நளினியை ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வந்து சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு நிச்சயம் தெரியும். அந்த விவரங்களை கருணாநிதி வெளியிட வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த சமயத்தில் அப்போதைய மத்திய அமைச்சரான பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார். அதன் பிறகு எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் ஆகியோர் இலங்கை சென்று வந்தனர். அந்த சமயத்தில், ‘இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்’ என அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, திடீரென உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் படுத்துக்கொண்டதன் பின்னணி என்ன?Negotiating Sales

முத்துக்குமார் தீக்குளிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்க முயற்சி செய்ததில் தி.மு.க அரசுக்குப் பெரும் பங்கு இருந்தது. 2009 ஏப்ரல் 10-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த பேரணியில் பேசிய கருணாநிதி, ‘பிரபாகரன் பிடிபட்டால் பஞ்சாப் சீலம் ஆற்றங்கரையில் போரோஸ் மன்னன் அலெக்ஸாண்டரிடம் பிடிபட்டபோது எப்படி நடத்தப்பட்டானோ அதுபோல் நடத்த வேண்டும்’ என்றும், ‘நாங்கள் இந்தியாவில் அடிமைகளாக இருக்கிறோம். ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாது’ என்றும் பேசியதன் அர்த்தம் என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய ராஜபக்‌ஷே, ‘பிரபாகரன் சாகவில்லை. விடுதலைப்​புலிகள் இயக்கம் இலங்கையில் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை’ என்கிற ரீதியில் கருத்து தெரிவித்து இருக்கிறார். எனவே, பிரபாகரன் பற்றிய உண்மைகள் தமிழின மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.Negotiating Sales

ஈழத்தில் கடைசிக்கட்ட போரின்போது நடந்த சம்பவங்கள் அனைத்தும் கருணாநிதிக்குத் தெரியும். பிரபாகரன் பற்றிய உண்மைகள் அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். இலங்கையில் நடந்த அனைத்து விவரங்களையும் தமிழின மக்களின் நலன் கருதி கருணாநிதி வெளியிட வேண்டும். குறிப்பாக, பிரபாகரன் பற்றிய உண்மைகளை அவர் வெளியே சொல்ல வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.Negotiating Sales

தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியின் நெல்லை மாவட்ட பொறுப்​பாளரான கண்மணி மாவீரன், ”நேதாஜி பற்றிய உண்மைகளை வெளியிடாமல் காங்கிரஸ் அரசு மறைத்து வந்தது. இப்போது பி.ஜே.பி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இதுவரை மறைக்கப்பட்டு வந்த அந்த வரலாற்று உண்மைகளை மோடி அம்பலப்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவரும் அதை வெளியிட மறுக்கிறார். நேதாஜியை பொறுத்தவரை, ‘அடுத்த பிறவி எனக்கு இருக்குமானால், தமிழனாகப் பிறந்து தமிழின மக்களுக்கு தொண்டு செய்வேன்’ என்று சொன்னவர். நேதாஜி, பிரபாகரன் ஆகிய இருவரைப் பற்றிய முழு விவரங்களும் உடனடியாக     வெளி​யிடப்பட வேண்டும். இதை வலியுறுத்தி ஏற்கெனவே ரயில் மறியல் போராட்டம் நடத்தினோம். எங்களின் இந்தக் கோரிக்கைக்காகத் தொடர்ந்து போராடுவோம்” என்றார் ஆக்ரோஷமாக.Negotiating Sales

என்ன சொல்லப்போகிறார்கள் மோடியும் கருணாநிதியும்!

[wysija_form id=”1″]