புயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…?

லகக் கோப்பை போட்டி நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவில் புயல் காரணமாக பொதுமக்கள் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், வங்க தேச கிரிக்கெட் அணிக்கு இந்த புயலால் அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே கூற வேண்டும்.

உலகக் கோப்பை போட்டியில் ஏ பிரிவில் இன்று நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா -வங்க தேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிரிஸ்பேன்  நகரில் உள்ள கப்பா மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று காலை 9 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக பிரிஸ்பேனை தாக்கி வந்த லாம் புயலால் அந்நகரில் பலத்த மழை பெய்து வந்தது..

மழை காரணமாக  போட்டியை நடத்துவது சாத்தியமில்லாமல் போனதையடுத்து இந்த ஆட்டம் ரத்து  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதால் வங்கதேச அணிக்கும் ஒரு புள்ளி கிடைத்தது. ஒரு வேளை இந்த போட்டி நடைபெற்றிருந்தால் பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணிதான் வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால் போட்டி ரத்து செய்யப்பட்டதால், 2 போட்டிகள் மூலம் 3 புள்ளிகளுடன் வங்க தேச அணி புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியும் 2 ஆட்டங்களின் மூலம் 3 புள்ளிகளை ஈட்டி 2வது இடத்தில் இருக்கிறது. இந்த பிரிவில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.