மண்ணின் மைந்தர்கள் – எழுத்தாளர் செந்திவேலு – எழுத்து வேளாண்மையாளர்

எழுத்தாளர் செந்திவேலு – எழுத்து வேளாண்மையாளர்

தாய் மொழி சிந்தனையின் உச்ச வடிவம்தான் எழுத்தாற்றல். புனைவு கதைகள் அல்லாமல் கற்றதையும் – பெற்றதையும் கருவாக்கி, சாமான்ய மக்களின் உரையாடல்களோடு உருவாக்கும் எழுத்தாற்றல் இவரின் சிறப்பு.
மழையில் நனைந்த மண் வாசனையோடு – சாலையோர கடையில் டீ சாப்பிடும் அனுபவம் பெற்றிருக்கிறீர்களா ? அதுதான் செந்திவேலுவின் எழுத்து.
இவருடைய சிறுகதைகளில் கதையின் கருவை சுற்றி கதை களமும் – காட்சி விவரிப்பும் – உரையாடல்களும் சீரான வேகத்தோடு நகர்வது இவர் கதைகளின் சிறப்பு.SENTHIVEL

எழுத்தாளர்களின் வெகுவான பாராட்டை பெற்ற இவரது இரண்டு சிறுகதை தொகுப்புகள் ‘ போகும் இடம் வெகு தூரம் இல்லை ‘ – ‘நிகழ்வுகள் நினைவாக’.

‘நிகழ்வுகள் நினைவாக’ சிறுகதை தொகுப்பின் முகவுரையில் திரைப்பட இயக்குநர் திரு. ஆர். வேல்ராஜ் குறிப்பிட்டதை போன்று, அடுத்தவரை தர்மசங்கடபடுத்தாத உயர் குணம் கொண்ட நண்பர்.SENTHI BOOK
நான் மதுரைக்கு வந்த ஆரம்ப காலங்களில் ( 1994 ) , நானும் , நண்பர் K.K. கண்ணனும் செந்திவேலு வீட்டிற்கு சென்றபோது , மதுரையின் சிறந்த விருந்தோம்பல் முறையை அங்கு கண்டேன். பண்பான விருந்தோம்பல் முறையை கடைபிடிப்பவர்.
இவரின் சிறந்த சிறுகதை தொகுப்புகளை பெற – editor@tamilagamtimes.com – ல் தொடர்பு கொள்ளவும். SENTHILBOOK1