மண்ணின் மைந்தர்கள் – வழக்கறிஞர் சபரிநாதன் – ஆழ்கடல் ஞானி

sabariவழக்கறிஞர் சபரிநாதன் – ஆழ்கடல் ஞானி

ஆழமான அமைதியும் – அடர்ந்த அமானுஷ்யமும் கொண்ட அறிவார்ந்த உளவியல் அமைப்பு கொண்டவர் வழக்கறிஞர் சபரிநாதன்.

நண்பர்களின் உரையாடல்களின் போது புழங்கும் சொல்லாடல்கள் குறித்து மிக கவனமாகவே எதிர்வினையாற்றுவார். கவனமான சொல்லாளுமை எப்போதுமே நுண்ணிய உறவுகளை பாதுகாக்கும் என்ற வழக்கமுடையவர்.
இவர் சிறந்த புகைப்பட கலைஞர்.
அதிகாலை இயற்கை அழகு – இயற்கையின் இயல்பான எளிய வண்ணங்கள் ஆகியவற்றை நாம் நம் கண்ணொளியில் கண்டு உணர்ந்ததை – காணொளியில் சிறப்பாக படம் பிடிக்கும் திறன் இவரின் சிறப்பு.
ஜீனியர் விகடன் பத்திரிகையில் இவருடைய பல புகைப்படங்கள் பரிசு பெற்றுள்ளன. உதாரணமாக, சூரிய ஒளியில், தென்னை நார் கட்டிலின் சிறு துவாரங்கள் ஒரு குழந்தையின் முகத்தில் படிவதை அழகாக படம் பிடித்திருந்தார். அந்த புகைப்படம் சிறப்பு பரிசு பெற்றது.
சுருக்கமான பேச்சும் – ஆழமான அவதானிப்பும் இவரின் நட்புறவிற்கு பலம்.