மண்ணின் மைந்தர்கள் – K.K.கண்ணண் – சுய சிற்பி

K.K.கண்ணண் – சுய சிற்பி

KANNANமொழி வழி கல்வியில் பட்டம் பெற்ற வழக்கறிஞர் – அனுபவ கல்வியில் ஆற்றல் பெற்ற அபூர்வ சிந்தனையாளர்.
சிறு வயதில் மா – சே – துங்கின் கம்யூனிச கொள்கை பயின்று – சமகால அறிவியல் பரிணாமங்களை கற்று- திரு. அவனி மாடசாமி அவர்களின் சிந்தனை பட்டிமன்றங்களில் சிறப்பு பேச்சாளாராக பங்கேற்று – சமூக உணர்வுகள் , உறவுகள் எவ்வாறு வழக்குகளாக மாறுகின்றன என்ற நுட்பாற்றல் கொண்ட வழக்கறிஞராக பரிணாமம் அடைந்திருக்கும் பன்முக தன்மையாளர்.

இவரது சிந்தனைக்கு ஆற்றலுக்கு ஒரு உதாரணம், ” நாம் வீட்டிலிருந்து வண்டியை எடுத்து கிளம்பும்போது ஆன்மீகவாதியாய் பிரார்த்தனை செய்து கிளம்ப வேண்டும். வண்டியை இயக்கும்போது பகுத்தறிவாதியாய் சிந்தித்து வண்டியை இயக்க வேண்டும். ” ஒவ்வொரு சூழலிலும் நாம் எவ்வாறு சிந்திக்க பழக வேண்டும் என்பதற்காக அவர் கூறியது.
அடிப்படையில் கவிஞர் – சிந்தனை எழுத்தாளர். கல்லூரி காலங்களில் இவர் எழுதிய சிறுகதைகள் பல மதிப்பான பரிசுகளை பெற்றுள்ளன. ‘பொய் சொல்லான்’ என்ற இவரது சிறுகதை சிறந்த உளவியல் அடிப்படையில் எழுதப்பட்டது. www.tamilagamtimes.com – இணைய இதழில் இவருடைய சிந்தனைகளையும் – உரையாடல்களையும் அடிப்படையாக கொண்டு பல கட்டுரைகள் வெளிவந்துள்ளது.

பொதுவாக , தொழில் நுட்ப கல்வி பயின்றவர்கள் தொழில்துறை வல்லுனர்களாக மட்டுமே உருவாகுவதுண்டு. ஆனால் இலக்கிய நுட்பம் – கருத்து பேச்சாற்றல் – வாழ்க்கையை அதன் போக்கிலேயே சென்று தன் வசப்படுத்தும் வாழ்வியல் நுட்பம் – மனித உறவுகளுடன் நட்பாற்றல் என தன்னை தானே வடிவமைத்து கொண்ட சுய சிற்பி.