மதுரையில் ஒரு மீன் மருத்துவர்!

[wysija_form id=”1″]பாண்டிய நாட்டு கொடில மீன் பார்த்திருப்பீங்க. ஆத்தோரம் நீந்தற மீனை பார்த்திருப்பீங்க… கண்ணாடி தொட்டிக்குள்ள பார்த்திருப்பீங்க… ஆனா, நமக்கு டாக்டரா அறிமுகமாகிற மீனை பார்த்திருக்கீங்களா….. பார்க்க பிரியப்பட்டால் வாங்க மதுரைக்கு….

முதன்முறையாக மதுரையில் இதை அறிமுகப்படுத்தியிருக்காங்க. கால்களிலிருந்துதான் பல நோய்கள் உடலுக்குள் ஊடுருவுகின்றன. அதனால் முக்கியமா நாம் கவனிக்க வேண்டிய கால்களுக்குதான் இந்த மீன், வைத்தியம் பார்க்கிறது. அக்குபஞ்சர் முதல் நம்ம ஊர் கோவில்ல ஆணி மிதிக்கிறது வரை எல்லாமே பாதத்திலேயிருந்து தானே ஆரம்பிக்கிறாங்க.http://tamilagamtimes.com/?post_type=product

“இந்தப் ”பிஷ் பெடிக்யூர் ஸ்பா” சிகிச்சை மூலமாக நம் பாதத்தில் இருக்குற அழுக்கு எல்லாத்தையும் மீன்கள் எடுத்திடும். காலும் கூழாங்கல் மாதிரி பள பளவென்று ஆயிடும். சிகிச்சையின்போது மீன் காலை கடிக்கிறப்பவே மூளை வரை புத்துணர்ச்சி பரவும். மனசும் ஒருநிலைப்பட்டு, நம் வேலைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியும் என்கிறார்கள்.
http://tamilagamtimes.com/?post_type=product
சிகிச்சைக்காக வந்திருந்த ரம்யா, மற்றும் தீபா, ”பர்ஸ்ட் டைம் பண்றப்ப பயமா இருந்துச்சு. இப்ப 3 தடவைக்கு மேல பண்ணிகிட்டேன். ரிசல்ட் நல்லா தெரியுது, பஞ்சு மாதிரி ஆயிடுச்சு பாதங்கள். அதை விட, மைன்ட் ரிலாக்ஸ்டா இருக்கு” என்கின்றனர் ஒருமித்த குரலில்.

”இது ஒரு நேச்சுரலான டிரீட்மெண்ட். மனித உடலில் கால்களின் பங்களிப்பு ரொம்ப முக்கியம். அவற்றை நாம் கவனிக்காமல் விட்டால் அது பல நோய்களுக்கு வரவேற்பாளராக மாறிவிடும். இந்த மீன் சிகிச்சை மூலம் நம் உடலில் பல நோய்களை தவிர்ப்பதோடு உற்சாகமான மனநிலையை அடைய முடியும். http://tamilagamtimes.com/?post_type=product

வெளிநாடுகளில் இது ரொம்ப பிரபலம். இந்தியாவில் பெங்களூர், ஹைதராபாத், சென்னைலகூட இருக்கு. இப்போது மதுரையில் ஆரம்பித்திருக்கிறோம். 10 நிமிடம் பண்ணிக்கிறப்ப, கால்கள் ரிலாக்ஸ்டா ஆகிடும். கால்ல ரொம்பப் பாதிப்பு உள்ளவங்க, 6 தடவை இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். இந்தச் சிகிச்சையை ஜாலியா எடுத்துக்கலாம். இதற்கான கட்டணமும் ரொம்ப குறைவுதான்“ என்கிறார்.http://tamilagamtimes.com/?post_type=product

உண்மைதான், பாதம் ரொம்ப முக்கியமில்லையா..?http://tamilagamtimes.com/?post_type=product

[wysija_form id=”1″]