மரப்பயிர்களுக்கும் இனி, இலவச மின்சாரம்!

[wysija_form id=”1″]

கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை போன்றவற்றுக்கு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கக் கூடாது என்பது மின்வாரியத்தின் உத்தரவுகளில் ஒன்று. இதைக் காட்டியே.. மரப்பயிர்களை வளர்க்கும் விவசாயிகளிடமும் கெடுபிடி செய்துவந்தனர் மின்துறையினர். இந்நிலையில், ‘மரப்பயிர்களுக்கு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தத் தடையில்லை’ என்று தெளிவுபடுத்தியிருக் கிறது… தமிழக மின்வாரியம்.

இதைப் பற்றி பேசிய கோயம்புத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் பிரசாரப் பிரிவுத் தலைவர் நாராயணசாமி, ”மரப்பயிர் சாகுபடிக்கு மாறிய விவசாயிகளுக்கு ஆடு, மாடுகள், வெளியாட்கள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகளைக் காட்டிலும், அதிக தொல்லை கொடுத்தது… மின்சாரம்தான். ‘நெல், கரும்பு, வாழை மாதிரியான வேளாண்மைப் பயிர்களுக்கு மட்டும்தான் இலவச மின்சாரம். மரப்பயிர்களுக்குக் கிடையாது’ என்று சொல்லி, 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் வசூல் செய்து வந்தனர்.

இந்நிலையில், எங்கள் சங்கத்தின் மூலம் மூன்று ஆண்டு காலமாக மின்சாரத்துறைக்கும், வனத்துறைக்கும் பல கடிதங்களையும், கோரிக்கை மனுக்களையும் அனுப்பி வந்தோம். இதன் பலனாக, கடந்த ஆண்டு, மின்சாரத்துறை மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ‘வேளாண்மை மற்றும் இதரப் பயிர்களுக்கு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என்று சட்டத்தில் இருக்கிறது. இதரப்பயிர்கள் என்கிற அடிப்படையில், 10 ஹெச்.பிக்கு குறைவாக இருக்கும் மின் இணைப்புகள் மூலம் மர சாகுபடி செய்யும் விவசாயிகள், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி பாசனம் செய்து கொள்ளலாம்’ என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

எனவே, விவசாயிகள் இனி புதிய மின் இணைப்பு வாங்கும்போது, மரம் வளர்ப்புக்கு என்று குறிப்பிட்டு கேட்டே இலவச மின்சார இணைப்பை வாங்க முடியும். ஏற்கெனவே இலவச மின்இணைப்பு வைத்திருக்கும் விவசாயிகள், வேளாண்மைப் பயிரில் இருந்து மரப்பயிருக்கு மாறும்போது சம்பந்தப் பட்ட மின்சார வாரிய அலுவல கத்தை அணுகி எளிதில் மாற்றிக் கொள்ள முடியும்” என்று பயனுள்ள தகவலைப் பகிர்ந்தார்!

நன்றி விகடன்

FOLLOW OUR DOMAIN VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

[wysija_form id=”1″]

VISIT OUR GROUP OF DOMAINS

EDITOR – www.tamilagamtimes. com

http://yazhinimaran.com/ FOR MEDICAL ARTICLES
http://isaipriyanka.com/ FOR ECONOMICAL ARTICLES
https://kaviazhaku.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES
http://shanthivinayagam.com/ FOR WOMEN
http://alagusundari.com/ FOR SPIRITUAL