மில்க்ரெசிப்பிக்கள்

காட்டேஜ்சீஸ்சாலட்

தேவையானவை:
பனீர் (காட்டேஜ்சீஸ்) – 250 கிராம்
கேரட் – 100 கிராம்
பூண்டு – 2 பல்
லெட்யூஸ்இலை – 150 கிராம்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) – அரைடீஸ்பூன்
வால்நட் – 4 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறுஎடுத்துக்கொள்ளவும்)
மிளகுத்தூள் – ஒருசிட்டிகை
எண்ணெய் – தேவையானஅளவு
உப்பு – தேவையானஅளவு

unnamed

செய்முறை:
பனீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து பத்துநிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊறவைத்த பனீர் மற்றும் தோல் நீக்கிய முழுப்பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும்வரை பொரித்துஎடுக்கவும். பிறகு, அகலமான பவுலில் பொரித்தெடுத்த வற்றுடன் தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

சில்லிபனீர்

தேவையானவை:
பனீர் – 200 கிராம்
மைதாமாவு – 75 கிராம்
கார்ன்ஃப்ளார்மாவு – 25 கிராம்
பெரியவெங்காயம் – ஒன்று
குடமிளகாய் – ஒன்று
பச்சைமிளகாய் – 4
இஞ்சி – ஒருடீஸ்பூன்
பூண்டு – 4 பல்
செலரிதண்டு – ஒருடேபிள்ஸ்பூன்
வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்
சிவப்புமிளகாய்சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
சோயாசாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒருடீஸ்பூன்
உப்பு – அரைடீஸ்பூன் (மாவுகலவைக்கு)
உப்பு – தேவையானஅளவு
எண்ணெய் – பொரிக்கத்தேவையானஅளவு
தண்ணீர் – 50 மில்லி

unnamed (1)

செய்முறை:

பனீரை சதுரமாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, செலரி, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாகவும், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுரமாகவும் நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, கார்ன் ஃப்ளார் மாவு, அரை டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுபதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதில் நறுக்கிய பனீரை முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சைவாசனை போனதும் செலரி, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு சிவப்புமிளகாய் சாஸ், சோயாசாஸ், உப்பு, தண்ணீர் என ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வேகவிடவும். இந்தக்கலவை கொதித்து வந்ததும், இத்துடன் பொரித்தெடுத்த பனீரைச் சேர்த்து நன்றாகக் கிளறி கலவை பனீரோடு சேர்ந்து வரும் வரை இரண்டு நிமிடம் சிம்மில் வேகவிட்டு இறக்கவும். இதில், நறுக்கிய வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.

சீஸ்பால்ஸ்

தேவையானவை:
மொசரெல்லாசீஸ் – 20
சின்னத்துண்டுகள்
உருளைக்கிழங்கு – 4
பெரியவெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – 3
பிரெட்கிரெம்ப்ஸ் – 50 கிராம்
முட்டையின்வெள்ளைக்கரு – ஒன்று
மிளகுத்தூள் – ஒருடீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
எண்ணெய் – தேவையானஅளவு

unnamed (2)

செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும், இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் கலந்து வதக்கி இறக்கவும். இதை கைபொறுக்கும் சூட்டில் எடுத்து, நடுவே ஒரு சீஸ்துண்டினை வைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒரு பவுலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உடைத்து ஊற்றவும். இதில் உருட்டி தயாராக வைத்துள்ள சீஸ் உருளைக்கிழங்கு உருண்டையை முக்கியெடுத்து பிரெட் கிரெம்ப்ஸில் புரட்டி, ஒரு தட்டில் அடுக்கவும். இப்படி எல்லா உருண்டைகளையும் தயார் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீஸ் பால்ஸை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  இதை பூண்டுசாஸ் அல்லது தக்காளிசாஸ் உடன் பரிமாறலாம்.

 

கேரட்மில்க்ஷேக்

தேவையானவை:
பால் – 150 மில்லி
துருவியகேரட் – 100 கிராம்
சர்க்கரை – தேவையானஅளவு
தண்ணீர் – 50 மில்லி
வெனிலாஐஸ்க்ரீம் – 50 கிராம்
ஐஸ்க்யூப் – 5

unnamed (3)

செய்முறை:
மிக்ஸியில் கேரட்டை மட்டும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் பால், சர்க்கரை, தண்ணீர், ஐஸ்க்ரீம் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நன்றாக சுழற்றி யெடுக்கவும். இதை ஒரு கிளாஸ் டம்ளரில்ஊற்றி, ஐஸ்க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
தேவைப்பட்டால்,  ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.

கொரியண்டர்பனீர்

தேவையானவை:
பனீர் – 200 கிராம்

மாவுக்கலவை:
மைதாமாவு – 75 கிராம்
கார்ன்ஃப்ளார்மாவு – 25 கிராம்
உப்பு – அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் – அரைடீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத்தேவையானஅளவு
தண்ணீர் – தேவையானஅளவு

கொத்தமல்லித்தழைசாஸ்:
கொத்தமல்லித்தழை – அரைகட்டு
பூண்டு – 8 பல்
பச்சைமிளகாய் – 5
உப்பு – தேவையானஅளவு
பெரியவெங்காயம் – ஒன்று
சோயாசாஸ் – ஒருடேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – ஒன்றில்பாதி
(சாறுஎடுத்துக்கொள்ளவும்)
எண்ணெய் – தேவையானஅளவு

unnamed (4)

செய்முறை:

ஒருபவுலில்  மைதாமாவு, கார்ன்ஃப்ளார்மாவு, உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜிமாவு பதத்தில் கலந்துகொள்ளவும். கலக்கியமாவில் பனீரை முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாஸுக்கு தேவையானவற்றில் உள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லித்தழை, பூண்டு, பச்சைமிளகாய், ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் இன்றி நன்றாக அரைத்து எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும். பனீரை சதுரமாக நறுக்கிக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற நன்கு வதக்கவும். இத்துடன் மிக்ஸியில் அரைத்த கலவையைச் சேர்த்து பச்சைவாசனை போக நன்கு வதக்கவும். பிறகு சோயாசாஸ், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலவை கொதித்து பச்சை வாசனை போனதும், பொரித்தெடுத்த பனீரை இதில் சேர்த்து நன்கு வதக்கவும். கலவை நன்கு சுண்டி வரும்போது இறக்கி கொத்தமல்லித் தழையைத் தூவிப் பரிமாறலாம்.

பட்டர்புட்டிங்

தேவையானவை:
வெண்ணெய் – 75 கிராம்
மைதாமாவு – 75 கிராம்
பொடித்தசர்க்கரை – 75 கிராம்
வெனிலாஎசன்ஸ் – ஒருடேபிள்ஸ்பூன்
முட்டை – ஒன்று
பேக்கிங்பவுடர் – கால்டீஸ்பூன்
சாக்லேட்சாஸ் – தேவையானஅளவு
சாக்லேட்கிரெம்ப்ஸ் – சிறிதளவு

unnamed (5)

செய்முறை:
அகலமான ஒரு பவுலில் வெண்ணெய், பொடித்த சர்க்கரையைச் சேர்த்து முட்டையை அடித்து கலக்கும் கருவியால் க்ரீம் பதத்துக்கு நன்கு அடித்துக்கொள்ளவும். இதனுடன் முட்டை, வெனிலாஎசன்ஸ், பேக்கிங்பவுடர், மைதாமாவு சேர்த்து பீட்டரால் நன்கு அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய சிறிய அலுமினிய கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். பேக்கிங் அவனில் 150 டிகிரி செல்ஷியஸில் 30 நிமிடங்களுக்கு கலவையுள்ள கிண்ணத்தை வைத்து பேக் செய்யவும். அவனில் இருந்து எடுத்து சூடுஆறியதும், கிண்ணத்தில் இருக்கும் கலவையை ஒரு ப்ளேட்டில் அப்படியே கவிழ்த்து வைக்கவும். இதன் மேல் சாக்லேட்சாஸ் ஊற்றி சாக்லேட்கிரெம்ப்ஸ் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:
மைக்ரோவேவ் அவன் பயன்படுத்துவதற்கு பதிலாக இட்லிபாத்திரத்தில் கிண்ணத்தை வைத்து, சில்வர் ஃபாயிலால் மூடியும் கூட வேக வைக்கலாம்.

பனீர்பாயசம்

தேவையானவை:
பனீர் – 100 கிராம்
பால் – 500 மில்லி
சர்க்கரை – 150 கிராம்
ஏலக்காய்த்தூள் – 8
முந்திரி – 10
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) – 10
நெய் – இரண்டுடேபிள்ஸ்பூன்
பேரீச்சை – 30 கிராம்
பிஸ்தா – 2
பாதாம்பருப்பு – 3

unnamed (6)

செய்முறை:
பனீர் மற்றும் பேரீச்சை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை) சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பாலை ஊற்றி நன்றாக காய்ச்சிக் கொள்ளவும், இதில் நறுக்கியபனீர், பேரீச்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சவும். பேரீச்சை நன்கு வெந்தபிறகு வறுத்தமுந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை) சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட்டு இறக்கவும். ஒரு பவுலில் பாயசத்தை ஊற்றி பாதாம், பிஸ்தாவைப் பொடியாக்கிச் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு:
பனீர் பாயசத்தை ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.

 

மில்க்கேசரி

தேவையானவை:
பால் – 200 மில்லிலிட்டர்
சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய் – 7
வெள்ளைரவை – 100 கிராம்
நெய் – 30 மில்லி
முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) –
2 டேபிள்ஸ்பூன்
பாதாம்பருப்பு – 2
பிஸ்தா – 2
செர்ரிபழம் – 2

unnamed (7)

செய்முறை:
வாணலியில் சிறிது நெய்விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்தரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். பால் வற்றிரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்தபிறகு, நெய்யில் வறுத்தமுந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். இதில் பாதாம்பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:
கேசரிக்கு நிறம் வேண்டுமென்றால், பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்க்கலாம் அல்லது கேசரி மீது ஒரு சிட்டிகை குங்குமப்பூவைத் தூவியும் பரிமாறலாம்.

 

பனீர்ஸ்டஃப்டுபராத்தா

தேவையானவை:
துருவியபனீர் – 100 கிராம்
கோதுமைமாவு – 300 கிராம்
பெரியவெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – 4
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
நெய் – 50 மில்லி
தண்ணீர் – தேவையானஅளவு

unnamed (8)

செய்முறை:

பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை மிக்ஸியில் பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். கோதுமைமாவில், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து 15 நிமிடங்கள் துணியால் மூடிவைக்கவும். ஒரு பவுலில் துருவிய பனீர், வெங்காயம், அரைத்த பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும். கோதுமை மாவை சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையில் வைத்து சமன்படுத்தி, இதில் சிறிதளவு பனீர் கலவையை வைத்து மூடவேண்டும். பிறகு மாவை சப்பாத்திக்குத் தேய்ப்பது போல தேய்த்து தோசைக் கல்லில் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால், பனீர் ஸ்டஃப்டுபராத்தா தயார். பராத்தாவை பனீர் பட்டர் மசாலா அல்லது பச்சைப்பட்டாணி மசாலாவுடன் பரிமாறவும்.

 

மில்கிரைஸ்புட்டிங்

தேவையானவை:
பால் – 750 மில்லி
பாஸ்மதிஅரிசி – 100 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
ரோஸ்எசன்ஸ் / வெனிலாஎசன்ஸ் – ஒருடீஸ்பூன்
பாதாம்பருப்பு – 2
பிஸ்தா – 2

unnamed (9)

செய்முறை:
பாஸ்மதி அரிசியை இரண்டு மூன்று முறை நன்றாகக் கழுவி, தண்ணீரில் 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். கெட்டியான பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சிய பிறகு, இதில் ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து பால் சுண்டும் வரை குறைந்த தீயில் நன்கு வேகவிடவும். பாலில் அரிசி வெந்தவுடன் சர்க்கரை, ரோஸ்/வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கிளறி, கலவை கெட்டியான பிறகு இறக்கி ஆற வைக்கவும். பரிமாறும் முன்பு பாதாம், பிஸ்தா தூவி பரிமாறவும்.