முகர்ந்ததும் – நுகர்ந்ததும்….

செப்பு சாமான்களையும் – பொம்மைகளையும் முகர்ந்து – அதை நாவால் நுகர்ந்ததுதான் முதல் அறிவு நுகர்வு,

முகர்ந்து தேடலில் வாழ்வின் முதல் அத்தியாயம் தொடங்கியது,

முகர்ந்தது பாட புத்தகங்களை; நுகர்ந்தது மொழியும், கல்வியும்,

முகர்ந்தது பண காகித வாசனையை ; நுகர்ந்தது ஊதியம் பெறும் வேலையை,

முகர்ந்தது பெண்ணை ; நுகர்ந்தது திருமணத்தை,

முகர்ந்தது உணர்விலும் ; நுகர்ந்தது மூளையிலும் கரைந்தது கண்டு,

வாழ்வின் இரண்டாம் அத்தியாய முகர்வும் – நுகர்வும் மொழிகள் கடந்து நுட்பமாய் தொடங்கும்,

மொழி இல்லா காற்றை முகர்ந்து ; அரூப ஞானம் நுகரும் மனம் ,

ஒலியில்லாத அதிர்வும்; ஒளியில்லாத காட்சியும் மனம் பழகும்,

இதை முதலிலேயே முகர்ந்தெடுக்க மூளைக்கு ஏன் வலுவில்லை ?

ஆறாம் அறிவு கொண்டு வாழ்வை அளந்தெடுக்கும் உடல் விசை முடிந்த பின்தான்

இந்த ஓசையற்ற பிரபஞ்ச ஒலியிசை மூளையில் பரவி மனம் முகர்வும் – நுகர்வும் கடக்கும்.

READ ENGLISH ARTICLES  tamilagamtiems.blogspot.com
CONTACT EDITOR FOR OLD ARTICLES FOR THIS SITE : editor@tamilagamtimes.com