குல தெய்வ வழிபாடு அறிவியல் பூர்வமானதா ?

ஆம் . எப்படி ? பார்ப்போம் .

குல தெய்வ வழிபாடு அறிவியல் பூர்வமானதா ?

ஆம் . எப்படி ? பார்ப்போம் .

நம் சிறு வயதில், நம் பெற்றோரிடம் நாம் கேட்கும் கோரிக்கைகளை விட , நாம் கேட்காமலே கிடைக்கும் வரங்கள் நம் தாத்தா – மாமா மற்றும் நம் உறவினர்களிடமிருந்துதான். அதனால், உறவினர்களின் உருவங்கள் நம்பிக்கை அடையாளமாக நம் ஆழ் மனதில் பதிவாகிவிடும் .

நீங்கள் நன்றாக உற்று நோக்கினால் நம் மூல தெய்வங்கள் – நம் குல தெய்வங்களின் உருவங்களில் நம் மூதையார்களின் உருவ சாயல் காணலாம் . அந்த தெய்வ உருவங்கள் சொற்களாலும் – காட்சிகளாலும் நம் மனதில் நம்பிக்கைகள் தோற்றுவிக்கும் என்று மட்டுமில்லாமல், அவ நம்பிக்கைகளை நீக்கி விடும் என்பது அறிவியல் உண்மை .