மைண்ட் வாய்ஸ் மச்சான் ( வெள்ளி தோறும் )

Image result for mind voiceமந்திரவாதி சாரதியும் – விஞ்ஞானி கோபாலும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர்.

நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

கோபால் சொன்னார், ” சாரதி முதல்ல நீங்க முதல்ல அந்த நீதிபதியோட புத்தியை ஆவியால கட்டுபடுத்துங்க … பார்ப்போம்.. ”
“… கோபால்ஜி… இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க… என்ன நடக்குதுன்னு.. ” என்றார் சாரதி.

நீதிமன்ற வளாக எண் 6….
நீதிபதி இருக்கையில் அமர்ந்தார்.
கோபாலும் – சாரதியும் பார்வையாளர்களோடு நின்றிருந்தனர். சாரதி கண்களை மூடிக்கொண்டு ஏதோ முணுமுணுத்தார்.
“.. அமைச்சர் அப்பாசாமி… சொத்து குவிப்பு வழக்கு… ” அறிவிப்பு வந்தது.
நீதிபதி அரசு வழக்கறிஞரின் வாதத்தை கேட்டுக் கொண்டிருந்தார். சாரதி கூர்ந்து நோக்கினார்.
நீதிபதி கேட்டார் .. ” மிஸ்டர் பிராசிகியூட்டர்.. அமைச்சரோட ஜாதக புத்தகம் எங்கே ? ” .
அரசு வழக்கறிஞர் சற்று குழம்பி பின்பு பணிவோடு கேட்டார்.. ” மன்னிக்கவும்.. தாங்கள் சொல்வது சரியாக கேட்க வில்லை மை லார்ட்… ”
“… அமைச்சர் அப்பாசாமியின் ஜாதக புத்தகம் எங்கே ? ” சத்தமாக நீதிபதி கேட்டார்.
“.. மை லார்ட்.. ஜாதக புத்தகம் எதற்கு ? வழக்கிற்கு சம்பந்தமில்லாததை ஏன் கேட்கிறீர்கள் என புரியவில்லை ? ” என்று குழம்பிய குரலில் கேட்டார்.
” … இருக்கு… ஒரு மனிதோட வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழ தகுதியான துணையை தேர்ந்தெடுக்க ஜாதகத்தை ஆராயும்போது … ஒருவருக்கு ஜாதகத்தில் நீதிமன்றத்தால் தண்டனை பெற வேண்டிய சூழல் இருக்கிறதா ? இல்லையா ? என ஆராய்ந்து பார்த்துதான் தீர்ப்பு சொல்ல முடியும்… இல்லையா ? ” என்றார் நீதிபதி.

அரசு வழக்கறிஞர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.
சாரதி இப்போது கோபாலை பார்த்து அர்த்தத்துடன் சிரித்தார். இருவரும் கோர்ட் ஹாலை விட்டு வெளியே வந்தனர்.
“.. என்ன விஞ்ஞானி … இப்ப புரிஞ்சுதா ? நான் அனுப்பின ஜோசியரோட ஆவி நீதிபதி மைண்ட்க்குள்ள புகுந்துடுச்சு பார்த்தீரா ? இப்ப என்ன சொல்றீரு ? ”
” இங்க பாருங்க சாரதி… நம்ம ஆராய்ச்சினால ஒருத்தருக்கு கெடுதல் வரக்கூடாது. இப்ப நீர் செஞ்ச காரியத்தால நீதிபதிக்கு வேலை போயிரும்… அதனால உடனே அந்த ஆவியை அவர்கிட்டயிருந்து எடுங்க..”
தலையாட்டிவிட்டு சாரதி திரும்பவும் ஏதோ முணுமுணுத்தார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்கும் தூரத்தில் இருந்து கேட்டு கொண்டிருந்த ஒருவன், வேகமாக தள்ளி சென்று தன் மொபைல் போனில் யாருடனோ பேசினான். “… நான் நேரிடையா பார்த்தேன்… அவனுக்கு உண்மையிலேயே அப்படி ஒரு சக்தி இருக்கு… ”
எதிர்முனையில் சொல்வதை பணிவுடன் கேட்டுகொண்டே சாரதியை ஒரக்கண்ணால் கவனித்து கொண்டிருந்தான்.
“.. ஒகே.. இன்னும் பத்து நிமிசத்துல அவனோட அங்க இருப்பேன்… ” செல்போனை கட் செய்துவிட்டு சாரதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

தொடரும்.. அடுத்த அத்தியாயம் 04 / 09 / 15

முந்தைய அத்தியாயம் படிக்க click here  

FOR FREE BOOKS  : https://www.facebook.com/pages/Tamilagamtimes-Publications/750764068310150