ரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …

ஷ்ய அதிபர் புதின்  குடித்துவிட்டு தனது மனைவியை தினமும் அடித்து உதைப்பவராகவும், பெண்ணை கீழே தள்ளி விடுவது போலவும் புதிய ஆவணப்படம் ஒன்றை ஜெர்மன் நாட்டின் ஜிடிஎம் டெலிவிஷன் வெளியிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத மேற்கத்திய உளவுத்துறை நிறுவனம் ஒன்றின் ரகசிய ஆவணங்களை வைத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

ரஷ்ய அதிபர் இதற்கு முன் தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவி லுயிட்மிலாவிடம் வன்முறை தனமாக நடந்து அடித்து உதைத்ததாக டெலிகிராப் செய்தி வெளியிட்டு இருந்தது.

1983 ஆம் ஆண்டு லுயிட்மிலாவை திருமணம் செய்து கொண்ட புதின், 2014 ஆம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளன.

இந்த ஆவணப் படத்தில் புதின் வாழ்க்கை குறித்து இடம்பெற்றுள்ளது. அவர் கேபிஜி பார்ட்டியின் அதிகாரியாக இருந்து படிப்படியாக தற்போது உள்ள அதிபர் பதவிக்கு வருவதை அது காட்டுகிறது. அதிகாரியாக இருந்த நாட்களில் இருந்து புதின் குடிகாரராக இருந்தார் என்கிறது அந்த ஆவணப்படம்.

கேபிஜி பார்ட்டியின் போது புதின் ஒரு பெண்ணை கீழே தள்ளியதாகவும், இந்த சம்பவத்திற்கு அவர் அருந்தியிருந்த மதுதான் காரணம் என்றும் கேபிஜி பார்ட்டியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுவது போன்று அந்த ஆவண படத்தில் உள்ளது.

புதினை லண்டனில் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், இதில் கேபிஜி முக்கிய தலைவர் ஒருவரும் சம்பந்தப்பட்டது உண்டு எனவும் ஆவண படத்தில் வருகிறது.

2010 ஆம் ஆண்டு தன்னை அழகுபடுத்துவதற்காக புதின் ஒரு ரகசிய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அந்த ஆவண படத்தில் கூறப்பட்டுள்ளது.