ரியல் எஸ்டேட்…

திண்டுக்கல் ஸ்பாட்  ரேட் நிலவரம்!

மிழகத்தில் மேற்கு மாவட்டங்களை தென்மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கியமான நகரம் திண்டுக்கல். சமீபத்தில் மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டாலும், மாநகராட்சிக் கான எந்த ஓர் அடிப்படை வசதிகளும் இன்னமும் செய்யப்படாததால், பெயரில் மட்டுமே மாநகராட்சி இருக்கிறது.

நகர் முழுவதும் குண்டும் குழியுமான சாலைகளும், சாலையோர ஆக்கிரமிப்பு களும் போக்குவரத்து நெரிசல்களுமாகத் திகழ்வதால், திண்டுக்கல்லில் ரியல் எஸ்டேட் பிசினஸ் அவ்வளவு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

உள்ளூர் தொலைக்காட்சிகள் அனைத்திலும், வீட்டுமனை விளம்பரங்களே அதிகம் அலறுகின்றன. திண்டுக்கல் நகரின் முக்கியத் தொழிலான பூட்டு உற்பத்தித் தொழில், தற்போது செழிப்பாக இல்லை. ஆனால், தோல் பதனிடும் தொழில் மட்டும் நல்லமுறையில் நடந்து வருகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள், நகைக் கடைகள், உணவு நிறுவனங்கள், ஆடை நிறுவனங்கள் என அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது கிளையை இங்கு துவங்கி வருகின்றன.

இந்த நிலையில் திண்டுக்கல் நகரின் ரியல் எஸ்டேட் நிலவரத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக நகரை வலம் வந்தோம்.

மற்ற மாவட்டங்களில் இல்லாத சிறப்பு, மாத தவணை திட்டத்தில் மனை விற்பனை சிறப்பாக நடந்து வருவது. சேமிப்பில் அதிக நாட்டமுள்ள திண்டுக்கல் மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மாதாந்திர தவணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி சாமானியனின் சொந்த மனை கனவை நிறைவேற்றி வருகின்றன திண்டுக்கல்லில் இருந்து செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். எனவே, திண்டுக்கல்லைச் சுற்றி தவணைமுறை திட்டம்தான் சக்கைபோடு போடுகிறது.

திண்டுக்கல் ரியல் எஸ்டேட் வரலாற்றில் முதன்முறையாகத் தவணைமுறை திட்டத்தை அறிமுகப்படுத்திய என்.எஸ்.எக்ஸ்போ சிட்டி சேர்மன் நடராஜனிடம் பேசினோம்.

”திண்டுக்கல் அதிவேகமாக வளர்ந்துவரும் நகரம். சமீபத்தில் மாநகராட்சியாக அறிவித்திருக்கிறார் கள். இனிமேல் வளர்ச்சிப் பணிகள் முழுவீச்சில் நடக்க நடக்க நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

இப்போதைக்கு திண்டுக்கல்லில் அதிக விலை போகும் இடம் மெயின்ரோடு பகுதிதான். சதுர அடி 7 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. மக்கள் மனைகளை வாங்க விரும்புவதால், திண்டுக்கல்  சேலம் ரோடு வேகமாக வளர்ந்து வருகிறது.

கலெக்டர் ஆபீஸ், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் என வேடசந்தூர் வரைக்கும் நல்ல வளர்ச்சி இருக்கிறது.

இரண்டாவது, பழனி ரோடு: ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஒரு கல்வி நகரமாகவே அந்தப் பகுதி மாறிவருவதால், ரெட்டியார் சத்திரம் வரைக்கும் மனைகள் வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பைபாஸ் ரோட்டுக்குப் பக்கமாக இருப்பதும் பழனி சாலைப்பகுதி வளர்ச்சிக்கான முக்கியக் காரணம்.

மூன்றாவது, திருச்சி ரோடு: இந்தப் பகுதியில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை என்றாலும், இந்த ஏரியாவை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். மதுரை ரோட்டில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், அங்கு மனைகள் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. முதலீடு செய்கிறவர்கள் இப்போதுதான் அந்தப் பகுதியில் மனை வாங்கிப் போட ஆரம்பித்திருக் கிறார்கள். நத்தம் ரோடு பகுதியில் பெரிய வளர்ச்சி இல்லை.

திண்டுக்கல் நகர்ப் பகுதியைப் பொறுத்தவரைக்கும் நேருஜி நகர், ஆர்.எம்.காலனி, விவேகானந்தா நகர், எம்.வி.எம். நகர், ரவுண்ட் ரோடு பகுதிகள் நல்ல வளர்ச்சி கண்டுவருகிறது. மற்ற மாவட்டங் களுடன் ஒப்பிடும்போது, திண்டுக்கல்லில்தான் மனைகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. 30 ஆயிரம் ரூபாயில்கூட இங்கு மனை வாங்க முடியும்.

நிலத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு திண்டுக்கல் அருமையான இடம். மாத சம்பளம் வாங்குபவர்கள் மாதம் 500 முதல் 1,000 ரூபாய் வரை தவணை முறையில் கட்டி மனையைச் சொந்தமாக்கிக் கொள்கின்றனர்” என்றவர், நகரில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலைமை எப்படி என்பதை விளக்கிச் சொன்னார்.

”திண்டுக்கல்லைப் பொறுத்தவரை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. மக்கள் அதை அதிகம் விரும்புவதுமில்லை. சில அபார்ட்மென்ட்டுகள் வந்திருக்கின்றன. ஆனால், அதுக்குப் பெரிய அளவுல வரவேற்பு இல்ல. காரணம், குறைஞ்சது30 – 40 லட்சம் ரூபாய் போட்டு அபார்ட்மென்ட்ல ஃப்ளாட் வாங்குவதைவிட, கொஞ்சம் தூரம் என்றாலும் குறைவான தொகையில் சொந்த இடத்தில் தனி வீடு கட்டிக்கொள்ளலாம் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது” என்றார்.

குறைந்த விலையில் மனை வாங்க நினைப்பவர்கள் திண்டுக்கல் ரியல் எஸ்டேட் நிலவரங்களைக் கவனிக்கலாமே!

ஆர்.குமரேசன்

படங்கள்: வீ.சிவக்குமார்.

திண்டுக்கல் மனை நிலவரம்:

(சதுர அடி விலை ரூபாயில்)

கரூர் சாலை :

கலெக்டர் ஆபீஸ் 1,000  800

தாடிக்கொம்பு வரை சாலையோர பகுதிகள் 500  350

உள்பகுதிகள் 250 150

பழனி ரோடு :

பைபாஸ் பகுதி 1,500  1,200

முத்தனம்பட்டி 800500

ரெட்டியார்சத்திரம் 800300

திருச்சி ரோடு:

சீலப்பாடி பை  பாஸ் 1,000400

ம.மூ.கோவிலூர் பிரிவு 800150

தாமரைப்பாடி 600200

மதுரை ரோடு :

பைபாஸ் 800400

அண்ணாமலையார் மில்ஸ் 600300

காந்திகிராமம் 800400

சின்னாளபட்டி 1,000  300

நத்தம் ரோடு :

குள்ளனம்பட்டி 1,000  500

ரெட்டியபட்டி 500  200

அடுக்குமாடிக் குடியிருப்பு விலை நிலவரம்

திருச்சி சாலை 2,500  4,000

விவேகானந்தா நகர் 3,0004,500


வாடகை வீடு எப்படி?

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், மாணவர்கள்தான் அதிகளவு வீடு வாடகைக்கு எடுக்கிறார்கள். மற்ற பெருநகரங் களைப்போல, ஐ.டி, பெரும் தொழிற்சாலைகள் இல்லாததால், வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிக்கல் இல்லை. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் பகுதி, ராம்நகர், எம்.வி.எம் நகர், கூட்டுறவு நகர், நேருஜி நகர், விவேகானந்தா நகர், பழனி ரோடு, சிலுவத்தூர் ரோடு டீச்சர்ஸ் காலனி, கோவிந்தாபுரம் ஆகிய ஏரியாக்களில்தான் வாடகை அதிகம். திண்டுக்கல்லைப் பொறுத்தவரை, வாடகையைவிட ஒத்திக்கு வீடு கொடுக்கும் வழக்கம்தான் அதிகமாக இருக்கிறது.