வரகுக் கூழ்வற்றல்

வரகுக்கூழ்வற்றல்

தேவையானவை:
வரகரிசி – 500 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – கால்டீஸ்பூன்
புளித்தமோர் – ஒருகப்
உப்பு – தேவையானஅளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சைமிளகாய் – 4

unnamed (11)

செய்முறை:
வரகரிசியை 3 மணிநேரம் ஊறவைத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் கலக்கி புளிக்க விடவும். மறுநாள் பெரிய குக்கரில் 4 லிட்டர் தண்ணீர் விட்டுஅரைத்த மாவை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். புளித்தமோர், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்குகலக்கி கொதிக்கவிடவும். இதனுடன் ஜவ்வரிசியையும் சேர்த்துக்கிளறவும். கெட்டியாக கூழ்காய்ச்சி, ஸ்பூனால் எடுத்து, பாலிதீன் ஷீட்டில், வட்டவட்டமாக ஊற்றவும். நன்கு காயவைத்து எடுத்து, தேவைப்படும் போது பொரிக்கவும். வரகுக்கூழ்வற்றல் தயார்.

திரைவாலிமுறுக்குவற்றல்

தேவையானவை:
குதிரைவாலிமாவு – 500 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
உப்பு – தேவையானஅளவு
பெருங்காயம் – கால்டீஸ்பூன்
பச்சைமிளகாய்விழுது – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒருடீஸ்பூன்.

unnamed (12)

செய்முறை:
ஜவ்வரிசியை முதல் நாள் இரவு ஊறவிடவும். காலையில் பச்சை மிளகாய் விழுது, பெருங்காயம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கலக்கவும் இதனுடன் குதிரை வாலிமாவு சேர்த்துக் கலக்கவும். 3 மடங்கு நீர்சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறவும். வெந்து, கெட்டியானதும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கி ஆறவிட்டு, முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து நன்றாகக் காய விட்டு எடுத்தால். குதிரைவாலி முறுக்குவற்றல் ரெடி.

தினைத்தக்காளிவற்றல்

தேவையானவை:
தினைமாவு – 2 கப்
ஜவ்வரிசிமாவு – அரைகப்
தக்காளிச்சாறு – ஒன்றரைகப்
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – கால்டீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு

unnamed (13)

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தக்காளிச்சாறு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவையான அளவு நீர்விட்டு கொதிக்கவிடவும். கொதிவரும் போது கலந்து வைத்துள்ள தினைமாவு, ஜவ்வரிசிமாவு சேர்த்து கெட்டியாகக் கிளறவும். பிறகு ஆறவிட்டு சிறிது, சிறிதாக கிள்ளிவைத்து நன்கு காயவிடவும். நன்கு காய்ந்ததும் சேர்த்து வைக்கவும். தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

சாமைகறிவேப்பிலைவற்றல்

தேவையானவை:
சாமைமாவு – 2 கப்
ஜவ்வரிசிமாவு – அரைகப்
கறிவேப்பிலை, பச்சைமிளகாய்அரைத்தவிழுது – அரைகப்
உப்பு – தேவையானஅளவு
பெருங்காயம் – கால்டீஸ்பூன்

unnamed (14)

செய்முறை:
சாமைமாவு, ஜவ்வரிசிமாவு, பெருங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். கறிவேப்பிலை, பச்சைமிளகாய் விழுதுடன் 2 மடங்கு நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிவரும் போது கலந்த மாவைக் கொட்டிக் கிளறி, கெட்டியானதும் ஆறவிட்டு, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டுப் பிழிந்து காயவிடவும் தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

வரகுபச்சைமிளகாய்வற்றல்

தேவையானவை:
வரகுமாவு – 2 கப்
ஜவ்வரிசி – அரைகப்
பச்சைமிளகாய்விழுது – 2 டீஸ்பூன்
சீரகம் – அரைடீஸ்பூன்
பெருங்காயம் – கால்டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு

unnamed (15)

செய்முறை:
வரகுமாவு, ஜவ்வரிசி (ஒருமணிநேரம்ஊறவைத்தது) பச்சைமிளகாய் விழுது, சீரகம், பெருங்காயம், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கலந்து நீரில் கலக்கவும். அடுப்பில் வைத்து கிளறி, வெந்ததும் இறக்கி ஸ்பூனால் எடுத்து, பிளாஸ்டிக்ஷீட் அல்லது சுத்தமான வெள்ளைத் துணியில் ஊற்றிக் காய விடவும். தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

மக்காச்சோளகூழ்வற்றல்

தேவையானவை:
மக்காச்சோளமாவு – ஒருகப்
அரிசிமாவு – அரைகப்
உப்பு – தேவையானஅளவு
சீரகம் – ஒருடீஸ்பூன்
பிரண்டைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – கால்டீஸ்பூன்
பச்சைமிளகாய்விழுது – ஒருடீஸ்பூன்

unnamed (16)

செய்முறை:
மக்காச்சோளமாவு,  அரிசிமாவு, உப்பு, சீரகம், பிரண்டைச்சாறு, பெருங்காயம், பச்சைமிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் 5 கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் மாவைக் கொட்டி கிளறி, வெந்ததும் இறக்கி, ஆறவிட்டு, ஸ்பூனால் எடுத்து துணியில் ஊற்றிக் காயவிடவும். தேவையான போது எடுத்துப் பொரித்தெடுக்கவும்.

கம்புபாலக்கீரைவடாகம்

தேவையானவை:
கம்புமாவு – 2 கப்
அரிசிமாவு – அரைகப்
ஜவ்வரிசி – அரைகப்
பாலக்கீரை, பச்சைமிளகாய்அரைத்தவிழுது – ஒருகப்
சீரகம் – ஒருடீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
பெருங்காயம் – கால்டீஸ்பூன்
புளித்தமோர் – ஒருகப்

unnamed (17)

செய்முறை:
கம்புமாவு, அரிசிமாவு, உப்பு, பெருங்காயம், சீரகம் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பாலக்கீரை, பச்சைமிளகாய் அரைத்த விழுது புளித்த மோர் தேவையான நீர் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும். நன்கு வெந்ததும் இறக்கி, இதனுடன் முதல்நாள் இரவே ஊறவைத்த ஜவ்வரிசியைக் கலக்கவும். வாழை இலை அல்லது மந்தாரஇலையை எடுத்துக்கொள்ளவும். இந்த மாவை கைகளில் வைத்து தட்டவும் (வாழைஇலைஎன்றால், தேவைக்கேற்ற மாதிரி வெட்டி நன்கு படியவைத்துக் கொள்ளவும். இலை வடாகம் போடுவதற்கேற்ற தட்டுகள் இருந்தால், இதையும் எடுத்துக்கொள்ளலாம்.) சிறிதளவு எண்ணெய் தடவி, ஆவியில் வேகவிட்டு எடுத்து, நன்கு காயவிடவும். பிறகு பொரித்தெடுக்கவும்.

 

வரகுமுறுக்குவற்றல்

தேவையானவை:
வரகரிசிமாவு – 2 கப்
பொடித்தஜவ்வரிசி – அரைகப்
சீரகம் – ஒருடீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
பெருங்காயம் – கால்டீஸ்பூன்
பச்சைமிளகாய்விழுது – ஒருடீஸ்பூன்

unnamed (18)

செய்முறை:
எல்லாப்பொருட்களையும் ஒன்றாகக் கலக்கி, தேவையான நீர்சேர்த்துக் கலக்கி, கொதிக்கவிடவும். நன்கு வெந்ததும், ஆறவிட்டு ஓமப்பொடி பிழியும் அச்சில் மாவைச் சேர்த்துப் பிழிந்து காயவிடவும். காய்ந்ததும் எடுத்து, தேவைப்படும் போது பொரித்தெடுக்கவும்.

 

வற்றல், வடாகம்போடும்முன்கவனிக்கவேண்டியவை

காலைஇளம்வெயிலில்பிழியவும்.

காகம்கொத்தாமல்இருக்க, கறுப்புத்துணிஅல்லதுகுடையை, குச்சியில்கட்டிவைக்கவும்.

வடாகத்துகுரிய  மாவைமெஷினில்அரைக்கும்போதே, ஜவ்வரிசிசேர்த்துஅரைத்துவைத்துக்கொள்ளலாம்.

புளித்தமோர்அல்லதுஎலுமிச்சைச்சாறுவிடலாம்.

மாவுபுளித்தபிறகுவற்றல்இட்டால், சுவைகூடும்.

* துணியில்வற்றல்பிழிந்தால், காயவிட்டு, நீர்தெளித்து, துணியில்இருந்துஎடுக்கவும்.

* 2 அல்லது 3 நாட்கள்நன்குகாயவிடவும். சரியாககாயவில்லைஎன்றால், பூஞ்சைபிடித்துவிடும்.

வற்றல்போடஏற்றகாலம்மார்ச், ஏப்ரல்மாதங்கள்.

* வற்றல்வகைகளைமைக்ரோவேவ்அவனிலும்பொரிக்கலாம்.

-கிருஷ்ணகுமாரி ஜெயகுமார்