வல்லினமும் – வலிமையும்

எறும்பு ஊர்ந்து செல்வது போல் லட்சிய கனவுகள் மிதமாக சேகரமாகும் பருவம் வாலிப பருவம். வல்லின சொற்களின் உச்சரிப்பு ஒலிவலிமை உடலில் வார்த்தை மின்னூட்டம் சேர்க்கும்.

image.png

உடல் ரீதியான சக்தியும் – மனதின் நேர்மறை எண்ண வலிமையும் நிறைந்த வாலிப பருவம் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம். கற்றுக் கொள்தலின் ஆரம்ப நிலை பருவம் என்பதால் கற்பதில் ஆர்வமும் – கற்றதில் கர்வமும் மனதில் நிரம்பி நிற்கும். இலக்கு நிர்ணயம் இல்லா மனதின் வேகம் ( TARGETLESS MIND SPEED ) – பரிணாம பகுப்பாய்வு ( EVALUATED LOGIC ) பயிற்சி இல்லாத ஆரம்ப நிலை மூளை என உடலும் மனமும் கலந்திருப்பதால் முரண் சுவை நிறைந்த வாழ்க்கை ஆரம்பமாகும்.

பிரபஞ்ச புதிர்கள் ஒவ்வொன்றாய் சுயமாய் மலர்ந்து பருவ பாடம் கற்பிக்கும்.

ஆனால், சமகால இளைஞர்களுக்கு தொழிற் நுட்ப ஊடக வளர்ச்சி ( TECHNICAL BASED MEDIA GROWTH ) காரணமாக நிறைய செய்தியும் – விரைவான எண்ண பரிணாமமும் என மனதளவில் தாயாராகிவிடுகிறார்கள்.

வாழ்வின் நேரிடையான சவால்களை சந்திப்பதில் அவர்களின் அணுகுமுறைகள் முந்தைய தலைமுறையினரிடமிருந்து  வேறுபடுகிறது. வாழ்வியல் சவால்களின் நேரிடை தாக்குதலில் அனுபவம் பயின்ற முந்தைய தலைமுறை தம்முடைய அனுபவங்களை பெருமைமிகு பதிவுகளாகவே மனதில் சுமந்து வருகின்றனர். கால மாற்றத்தினால் அதன் அனுபவ பயன்பாட்டுத் தன்மை மாறிவிடுகிறது.  இன்றைய இளைய சமுதாயம் சவால்களின் நுட்பம் அறிந்து நீக்கும் வல்லமை பெற்றிருக்கிறார்கள்.

இந்தியா போன்ற குடும்பம் சார்ந்த சமூக அமைப்புள்ள நாடுகளில் மனித வளத்திற்கான ஆரம்ப கல்வியும் – தொழிற் நுட்ப அறிவும் வாழ்க்கையில் உடல் – உறவு சார்ந்த தேவைகளுக்கான பொருள் தேடல் என்ற அளவில் சுருக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. கற்பக விருட்சங்கள் காளான்களாக கல்விக் கூடங்களில் உயிரியல் மாற்றம் ஆகிறது. ஆராய்ச்சி நிலை கல்வி மிக குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

உடல் வலிவும் – உள்ளத் துணிவும் சமூக முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் சீராக்கும் கல்வி வரை முறையோ – முன்னுதாரண தலைமுறையோ நம்மிடையே இல்லை. அதனால்தான் இந்த மனித வளம், கவர்ச்சி ஒப்புமை பேச்சாற்றல் ( ATTRACTIVE COMPARISION ) மட்டுமே கொண்டு, நேர்மையற்ற அரசியல்வாதிகளாகவும் – உயிர் பயம் ஏற்படுத்தும் செயல்களால் மட்டுமே தம் சித்தாந்தத்தை பிரகடனப்படுத்தும் தீவிரவாதிகளாகவும் பரிணாமம் அடைகிறது.

கவனம் திருப்பும் விளம்பரங்கள் நிறந்த சாலையில் ‘ திருப்பங்கள் ‘ நம் கண்களுக்கு தீடீரென்றுப் புலப்படும்போது திசை மாற்றி பயணிக்கும் திறன் நம்மிடம் இல்லை என்றால் விபத்து நிச்சயம் அல்லவா ? புறச்சூழல்களால் நம் குணாதிசய மன அமைப்புக்குள்ளும் ( CHARECTORISED INNER MIND )  – வாழ்க்கை பயணத்திலும் ஏற்படும்  மாற்றங்கள் குறித்த நம் விழிப்புணர்வு முக்கியம். இந்த திறன் இல்லையென்றால் நாம் திசை மாறிய வாழ்க்கை முறையை விருப்பமாகவோ – விருப்பமின்றியோ ஏற்றுக்கொள்ள நேரிடும்.

சர்வதேச அளவில், கடமையாற்றும் தொழிற் நுட்ப கல்வி அறிவு ( DUTY CONCIOUSED TECHNICIANS ) கொண்ட மனித வளம் நிறைந்திருக்கிறது. ஆனால், நம் இன்றைய தேவை உலகமெங்கும் நிறைந்துள்ள பட்டினி , இன வேறுபாடு கொண்ட யுத்த வெறி , நேர்மையற்ற அரசியல் போக்கு என அத்தனை சவால்களுக்கும் அடிப்படை புரிந்துக் கொண்டு செயலாற்றும் திறன் கொண்டவர்கள் தேவை.

எத்தனையோ சீர்திருத்தவாதிகளும் – மறுமலர்ச்சி சிந்தனை கொண்டோர்களும் தோன்றிய பின்பும் இந்த உலகம் ஏன் இன்னும் மாற்றப்படவில்லை என்பதை நாம் நுணுக்கமாக பகுப்பாய்வு செய்தால், சவால்களின் அடிப்படை புரியாமல் நாம் பேசுவதலோ – சபதம் கொள்வதாலோ ஒரு பயனும் இல்லை என்பது புரியும்.

கூச்சமின்றி தவறு செய்வோர் பொது வாழ்வில் நிறைந்திருந்தாலும் – விசித்திர மனிதர்கள் நிறைந்த சமூக அமைப்பு சூழ்ந்திருந்தாலும் உள்ளொளி ( INNER PERSONALITY AWARENESS ) கொண்ட இளைஞர்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஏனென்றால் இந்த தேசம் உளவியல் சார்ந்த – தர்க்க ரீதியான தத்துவ கோட்பாடுகளால் உருவானது.

EDITOR   – editor@tamilagamtimes.com