வளிமண்டல நீர் உற்பத்தி

நாம் அண்டை மாநிலங்களிருந்து நதி-நீர் வரவை எதிர்நோக்கி விவசாயம் செய்யும் நிலையில் இருப்பதுதான் தற்போதைய உணவு பயிர் உற்பத்தி நிலை. இயற்கையான நில வழி நீர் உற்பத்தி இடங்கள் ( NATURAL WATER SOURCE REGIONS )  நம் மாநிலத்தின் வருவாய் எல்லைக்குள் இல்லை என்பதால், நாம் நம் அண்டை மாநிலங்ககளிடம் நீர் வளத்தை கேட்டு பெறும் நிலையில் உள்ளோம். அவர்கள் ஏன் தரவில்லை என்பதை தேசிய ஒருமைப்பாடு – மொழிவாரி சிந்தனை என்ற தேசிய அகங்காரங்களுக்குள் சென்று வாதாட விரும்பவில்லை.

மாற்று சிந்தனையாக, மழைத் தரும் காடுகளின் பரப்பளவை பெருக்கம் செய்தன் மூலம், மாநிலத்தின் சராசரி மழை அளவை கூட்டி நீர் வளம் பெருக்கலாம் அல்லவா ? இருக்கும் நீர் வளத்தையும் முறையாக உணவு உற்பத்திக்கு பயன்படுத்தும் திட்டங்களை விவசாயிகளுடனும் – விவசாய ஆய்வு விஞ்ஞானிகளுடனும் இணைந்து உருவாக்கி செயல்படுத்தலாம். அந்தந்த பிரதேசங்களின் நீர் ஆதாரங்களை கொண்டு அந்த பிரதேசத்திலேயே உணவு பயிர் உற்பத்தி திட்டங்கள் உருவாக்கினால் தேசிய நதி நீர் திட்டம் போன்ற கனவு திட்டங்களில் நம் நேர பயன்பாட்டை விரயம் செய்ய வேண்டியதில்லை. விநியோக பரவலாக்கம் மூலம் உணவு உற்பத்தி குறைந்த இடங்களில் சமன்பாடு செய்யலாம்.

நம் அரசியல் பிரதிநிதிகள் இதை கவனிப்பார்களா ?