வழி விசாரித்து – ஊர் செல்வோமா ? TRUE MEANING OF LIFE

எல்லாம் நம்முடைய இந்த பிறவி விதிப்படிதான் நடக்கும் – பரிகாரம் செய்தால் சரியாகும் – இப்ப நடக்கிற கிரக மாற்றங்கள் சரியில்லை – கற்ற கல்விதான் வாழ்க்கைக்கு உதவும் – முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் நம்மை காக்கும் – ‘ அவர் ‘ சொன்னால் சரியாகத்தான் இருக்கும் – என் தன்னம்பிக்கையை தவிர வேறு எதுவும் எனக்கு உதவவில்லை – தேவைகள் என்னை துரத்தும் போது , சவால்கள் என் முன்னால் பிரமாண்டமாய் நின்றபோது என் தைரியம்தான் என்னை காத்தது – அட நம் வாழக்கையை தீர்மானிக்க எத்தனை விதமான விசயங்கள் . ஆனால் , இவையெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கையில் எந்த அளவுக்கு பொருந்துகின்றன .
திட்டமிட்டு செய்தவைகள் தோல்வி அடையும்போதும் – நாம் எதிர்பாராத வேளையில் நம் முயற்சி இன்றியே சில வேலைகள் நடக்கும்போதும் வாழ்க்கை பற்றிய நம் கண்ணோட்டம் மாறும் அல்லவா ?

தவறு செய்ய வேண்டும் என்பது என் வாழ்க்கை நோக்கமல்ல , ஆனால், அது ஏன் நடந்தது என தெரியவில்லை என்று எப்போதாவது எண்ணியதுண்டா ?

என்னை விட கெட்டவன் நன்றாக இருக்கிறான் , ஆனால் நான் செய்த சிறு தவறுக்கு மிக கடுமையாக வாழ்க்கையில் கஷ்டப்படுகிறேன் . ஏன் ?

எந்த ஊருக்கு போக வேண்டும் என தீர்மானித்துவிட்டோம் . வாருங்கள் விசாரித்து கொண்டே ஊர் சேர்வோம் .
மேற்கூறியவற்றிலோ அல்லது வேறு ஏதாவது தங்கள் அனுபவமாக இருந்தால் எழுதி அனுப்புங்கள் . அடுத்த வாரம் முதல் வாசகர் கடிதங்களும் வாழ்வியல் நிபுணர்களின் ஆலோசனைகளும் இடம்பெறும் பகுதி இது .

editor@tamilagamtimes.com