வாடகைவாசிகள் கவனத்திற்கு… 4

சென்ற வார அத்தியாயத்தில் நாம் தொடங்கியிருந்த கேள்விகள்

பகுத்தறிவு எவ்வாறு பௌதீக உடலில் வேலை செய்கிறது ? பகுத்தறிவு கொண்டு நாம் நம் வாழ்வியலை வளமாக மாற்றி கொள்ள இயலுமா ? எல்லாம் கடவுள் வகுத்த விதிப்படிதான் என்றால் பகுத்தறிவின் பயன் என்ன ?i888
முதற் கேள்விக்கு – முந்தைய அத்தியாயத்தில் விடை கண்டோம்.

அடுத்த கேள்விக்கு வருவோம். பகுத்தறிவு கொண்டு நாம் நம் வாழ்வியலை வளமாக அமைத்து கொள்ள இயலுமா ?
இயலும் என்கிறது அர்த்த சாஸ்திரம். “.. படைப்பியலின் முழு நோக்கமும் – நம் தோன்றலின் ( நம் உடல் தோற்றுவிக்கபட்டதன்… ) அவசியமும் அறிந்து கொள்வதுதான் பகுத்தறிவு… ” என்கிறது அர்த்த சாஸ்திரம்.
நாம் உண்ணும் உணவில் இருக்கும் தாதுக்களை எப்படி நம் உடல் பிரித்து தேவையான இடங்களுக்கு அனுப்புகிறதோ , அதே போல நம் பௌதீக அறிவும், தன்னுள்ளே ஒலியாகவும் – ஒளியாகவும் கிரகிக்கும் விசயங்களை தேவையான சமயங்களில் நமக்கு ‘ உள்ளொலி ‘ மூலம் அறிவிக்கும். உள்ளொலி கேட்பதற்கு நாம் ‘உட் குழப்ப சிந்தனை’ இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். பல அனுபவங்களின் கூட்டு பரிணாமம்தான் இந்த உள்ளொலி. உதாரணமாக ” நான் மனசு கேட்காமத்தான் இந்த வேலையை செஞ்சேன்.. ” என கூறுபவர்களை பார்த்திருக்கலாம். அந்த ‘மனசு கேட்காம’ என்பதுதான் உள்ளொலி.
இந்த உள்ளொலியை முழுமையாக கேட்டு உணர்ந்தவர்கள் ஞானியாகிறார்கள். இந்த உள்ளொலியை மிகச் சரியாக பயன்படுத்தியவர்கள் வாழக்கையை வளமாக அமைக்கிறார்கள்.

பார்வையற்ற – செவி திறன் இழந்த கடவுள் நம்பிக்கையாளரை நீங்கள் கண்டிருக்கலாம் , ஆனால் பார்வையற்ற – செவிடான ஒரு தீவிரவாதியை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது ? ஏன் ? என சென்ற அத்தியாயத்தில் கேட்டிருந்தேன்.
ஆதலால்தான், செவி / பார்வை திறன் இல்லாதவர்கள் தீவிரவாதிகளாக ஆவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு புற ஒலிகளை விட உள்ளொலி மிக அதிக சத்தத்துடன் கேட்கிறது. ஆதலால் அவர்களை தீவிரவாதிகளாக்குவது கடினம்.
எல்லாம் விதிப்படிதான் என்றால் பகுத்தறிவின் பயன் என்ன ? அடுத்த வாரம் காண்போம்.
முந்தைய அத்தியாயங்களை படிக்க..

FOR BOOKS https://www.facebook.com/pages/Tamilagamtimes-Publications/750764068310150

வாடகைவாசிகள் கவனத்திற்கு 1

வாடகைவாசிகள் கவனத்திற்கு 2

வாடகைவாசிகள் கவனத்திற்கு 3