ரேஸுக்கு வாங்க கேர்ள்ஸ்!

FOLLOW OUR BLOG VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us [email protected]

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS

”பல நூறு மாணவர்கள் போட்டிக்காக குழுமியிருக்கிற இந்த இடத்துல, நான் ஒரே ஒருத்தி மட்டும்தான் பெண் அப்படிங்கறத நினைக்கும்போது பெருமையாவும் இருக்கு, வருத்தமாவும் இருக்கு!”

– படபடப்புடன் பேசுகிறார்… கோவை, பி.எஸ்.ஜி கல்லூரியின் பி.இ., ஆட்டோமொபைல் மூன்றாம் வருட மாணவி அஷ்மிதா லக்ஷ்மி.

ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் திறனறியும்விதமாக, ‘சொஸைட்டி ஆஃப் ஆட்டோமொபைல் இன்ஜினீயர்ஸ்’ (எஸ்.எ.இ) எனும் அமைப்பு, தேசிய அளவில் ‘ப்ரோடோ டைப் ரேஸ் கார்’ வடிவமைத்தல் போட்டியை நடத்தியது. இருங்காட்டுக்கோட்டை, மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் நடந்த இப்போட்டியை வழங்கியவர்கள்… மாருதி சுசூகி. இந்திய அளவில் 183 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில், ஒவ்வொரு அணியிலும் 20 முதல் 25 மாணவர்கள் இடம்பெற்றனர். இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 87 அணிகளில், ஒரே பெண்தான் அஷ்மிதா லக்ஷ்மி.

”இறுதிப் போட்டிக்கு 87 கார்கள் தேர்வாகி நின்றன. அந்தந்த டீமில் ரெண்டு மாணவர்கள் கார்களை ஓட்டணும். எங்க டீமில் நானும், இன்னொரு மாணவரும் நாங்க வடிவமைச்ச காரை ஓட்டினோம். ஓட்டும் நேரம், வேகம், காரில் இருந்து வெளிவரும் சத்தம், எரிபொருள் எண்ணெய் கசிவு, நியூ வெரைட்டி, டிசைன்னு எல்லாத்தையும் பார்த்து பாயின்ட்ஸ் கொடுப்பாங்க” என்ற அஷ்மிதாவின் பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி டீம், இப்போட்டியில் ‘கார் ரிப்போர்ட் எக்ஸ்பிரிமென்டல்’ பிரிவில் முதல் இடத்தையும், ‘ஓவர் ஆல் எக்ஸ்பிரிமென்டல்’ பிரிவில் நான்காவது இடத்தையும் பிடித்தது.

”அப்பா ரேஸ்ல கலந்துப்பார். அந்த ஆர்வம் எனக்கும் வர, நானும் மூணு வருஷமா கலந்துக்கறேன். ஒரு பெண்கிறதால நண்பர்கள் பல சலுகைகள் கொடுக்க நினைப்பாங்க. ஆனா, அதையெல்லாம் எடுத்துக்கிறதில் எனக்கு விருப்பம் இல்ல. ஈக்குவல் ஸ்பேஸ் வேணும்னு கேட்கும்போது, ஈக்வல் வொர்க் கொடுக்கிறதுதானே சரி..?” என்று சொல்லும் அஷ்மிதா,

”மோட்டார் ஸ்போர்ட்ஸில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளும் இருக்கு, சாதனைக்குரிய களமும் இருக்கு. கேர்ள்ஸ் ப்ளீஸ் கம்!” என்று அழைக்கிறார்!

நன்றி விகடன்

FOLLOW OUR BLOG VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

TO GET YOUR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/
& write to us [email protected]

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS

VISIT OUR GROUP OF DOMAINS
EDITOR – www.tamilagamtimes. com
CONTACT : [email protected]

http://pickyourbooks.wordpress.com/ FOR COLLEGE E BOOKS

http://yazhinimaran.wordpress.com/ FOR MEDICAL ARTICLES

http://isaipriyanka.wordpress.com/ FOR ECONOMICAL ARTICLES

https://kaviazhaku.wordpress.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES

http://shanthivinayagam.wordpress.com/ FOR WOMEN

http://alagusundari.wordpress.com/ FOR SPIRITUAL

SHARE THIS DOMAIN http://pickyourbooks.wordpress.com TO YOUR FRIENDS TO FIND THEIR REQUIRED STUDY BOOKS