10 கோடி ரூபாய் நாக்கு!

[wysija_form id=”1″]உடல் உறுப்புகளை இன்ஷூரன்ஸ் செய்து பிரபலங்கள் அவ்வப்போது லைம்லைட்டில் இடம் பிடிப்பார்கள். ஹாலிவுட் நடிகை ஹெய்தி க்லம் தனது நீண்ட அழகான கால்களை இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய்க்கு இன்ஷூர் செய்துள்ளார். ஆனால் பிரபலங்களைத் தாண்டி ஒரு மனிதரின் உடல் பாகம் 10 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றால் அது ஆச்சர்யமோ ஆச்சர்யம்தானே?  http://tamilagamtimes.com/?post_type=product

செபஸ்டீன் மிச்சேலிஸ் என்கிற டீ சுவைஞரின் நாக்குதான் அத்தனை கோடிக்கு இன்ஷூர் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் டெட்லீ டீத்தூள் நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக வேலை பார்க்கும் செபஸ்டின் கிட்டத்தட்ட 1,500 வகை டீக்களின் சுவையறியக்கூடியவர். எந்த வித டீயையையும் ஒரு மிடறு குடித்து 15 விநாடிக்குள்ளாக அது எந்த நாட்டில் விளைந்தது, எந்த ரக டீ என்று சொல்லிவிடும் ஆற்றல்கொண்டவராம். டீ பிளெண்டர் ஆவது என்பது, விமானி ஆவதைவிட கடினமான வேலை. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் டிரெய்னிங் எடுத்தால்தான் டீ சுவைஞரின் உதவியாளர் என்கிற இடத்துக்கே வர முடியுமாம்.http://tamilagamtimes.com/?post_type=product

‘டீ என்பது கிட்டத்தட்ட ஒயினைப் போலத்தான். தேயிலை எங்கு விளைகிறதோ, அதனைப் பொறுத்தும் அங்கு நிலவிய வானிலையைப் பொறுத்தும்தான் சுவையும் நிறமும் இருக்கும். நாங்கள் (தேநீர் சுவைஞர்கள் ) எங்களுக்கென்று ஒரு தனிமொழி வைத்திருக்கிறோம், அதன் பெயர் உகுரு (ஆப்பிரிக்காவில் உள்ள ஸுவாஹிலி மொழியில் உகுரு என்றால் விடுதலை என்று பொருளாம்). அந்த மொழியில்தான் ஒவ்வொரு டீயின் தர அடிப்படையில் பெயர் சூட்டுவோம்” என்கிறார் செபாஸ்டின்.  ‘பாப் பாடகி டோலி பார்டன் தனது மார்பகங்களை 4 லட்சம் பவுண்டுக்கும் ஜூலியா ராபர்ட்ஸ் தனது புன்னகையை 3 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இன்ஷூர் செய்ததைக் கேள்விப்பட்டபோது நான் ஆச்சர்யப்பட்டேன். ஆனால் என் நாக்கு இந்த அளவு இன்ஷூரன்ஸ் செய்யப்படும் என்று கற்பனைகூட செய்யவில்லை’ என்கிறார்.http://tamilagamtimes.com/?post_type=product

ஒவ்வொரு வாரமும் டெட்லீயின் டீ பிளெண்டர்கள் சுமார் 40,000 கோப்பை தேநீரை சுவைத்து சோதித்து அதன் பின்னரே தேயிலைத்தூள் பேக்கிங் செய்யப்படுகிறதாம். பார்ரா!http://tamilagamtimes.com/?post_type=product

[wysija_form id=”1″]