13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5

மறுநாள்-

போலிஸ் கமிஷ்னர் அறையில் ஹைதராபாத் மாணவர் குழுவினர் அமர்ந்திருந்தனர்.

“ஒவ்வொருத்தரா உங்க பேரை சொல்லுங்க” கமிஷ்னர் குரலில் போலீசின் அதிகார தொனி மிகுதியாயிருந்தது.
ஒவ்வொருவரும் சொன்னார்கள் .

“உங்க டீம் லீடர் யார்?” கமிஷ்னர் . கூட்டத்திலிருந்து உயரமான ஒரு மாணவன் எழுந்தான்.

அவனிடம், “என்ன விசயமா சென்னை வந்தீங்க ?” கமிஷ்னர் கேட்டுவிட்டு அவனை கூர்ந்து கவனித்தார்.

“கல்ச்சுரல் புரோகிராம்”என்றான்.

அமைச்சர் ஆழிநாதன் கவனித்துக் கொண்டிருந்தார்.

அமைச்சருக்கு நேற்று கமிஷ்னர், குற்றம் சுமத்த பட்டவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தாமல் உண்மையை வரவழைக்கும் நவீன விஞ்ஞானத்தைப் பற்றி விளக்கியது ஞாபாகத்திற்கு வந்தது.

அதாவது மனித உணர்வுகள் வெளிப்படும்போது ஒவ்வொரு உணர்வும் உடலின் ஒவ்வொரு பாகங்கள் வழியாக வெளிவரும் என்பது உடல்கூறு அறிவியல்.

ஏதாவது ஒரு உணர்வைத் தூண்டும் கேள்விகளை கேட்டு குற்றம் சமந்தப்பட்டவர்கள் உடல் மொழியை விசாரணை அதிகாரி கவனிப்பார். உடல் மொழி மாற்றங்களை கொண்டு உண்மை கண்டறிவார். உடல் மொழியை கட்டுபடுத்தும் ஞானம் மனித மூளைக்கு இன்னும் வசப்படவில்லை.

அமைச்சர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் செல்போன் ஒலித்தது.செல்போனை ஆன் செய்தார்.

“விசாரணை முடிஞ்சுச்சா” நடிகை ராஜ ஸ்ரீ கேட்டார்.

“ப்ச் …… உருப்படியா எனக்கு தோணலை” அமைச்சர் சலிப்புடன் சொன்னார்.

அமைச்சரின் மனதில் புதியதாய் ஒரு ஐடியா தோன்றியது. கமிஷ்னரை நோக்கி ஏதோ கூற முயன்றார்.

அப்போது………

(தொடரும்….)

முந்தைய அத்யாயம் 13 -ம் நம்பர் ரயில்வே கேட்.. 4 : http://tamilagamtimes.com/13-ம்-நம்பர்-ரயில்வே-கேட்-4/