13 – ம் நம்பர் ரயில்வே கேட்… (1)

ளும் அரசியல் கட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது…

“… உங்களை போல் சமூக விரோதிகளையும் – நாணயமற்றவர்களையும் கொண்டதல்ல எங்கள் கட்சி… நாங்கள் நினைத்திருந்தால்… ” வயர்லெஸ் பேச்சு குறுக்கிட்டதால், மேடையை கவனித்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் வயர்லெஸ்ஸில் பேச ஆரம்பித்தார்.
“… ரங்கராஜன் …. ” சிட்டி கமிஷ்னர் வயர்லெஸ்ஸில் வந்தார்.
” … வணக்கம் … B – 3 ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன்… ஓவர் ”Image result for railway track
“.. கூட்டம் முடிஞ்சிடுச்சா .. ”
“.. இல்ல சார்.. இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம் .. ”
“.. முடிஞ்ச உடனே ரிப்போர்ட் பண்ணுங்க… ”
“.. ஒகே.. சார்… ” வயர்லெஸ்ஸை அணைத்துவிட்டு கூட்டத்தை கவனித்தார்.
அரசியல் கூட்டம் நடக்கும்போது கடலை விற்று கொண்டிருக்கும் ஆட்களை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. கடலை விற்பவர்களுக்கு வேறு தொழில் வடிவம் கிடைத்திருக்குமோ ? அல்லது மேடை பேச்சை கேட்டு கொண்டே கடலை சாப்பிடும் பழக்கம் போய்விட்டதா? யோசித்து கொண்டே கூட்டத்தை கவனித்து கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன்.

“… கண்ணியமிக்க காவல்துறை கனவான்களை கொண்டது எங்கள் ஆட்சி… ” கரகரத்த குரலில் அமைச்சர் ஆழியரசன் மேடையில் பேச ஆரம்பித்திருந்தார்.

மீண்டும் வயர்லெஸ் கூப்பிட்டது. ” .. ரங்கராஜன்.. “. கமிஷ்னர்.
“… சார்… ”
“… உங்க மொபைல் போன்ல்யிருந்து என் நம்பரை கூப்பிடுங்க… “. வயர்லெஸ்ஸை வைத்துவிட்டு மொபைலில் கமிஷ்னரை அழைத்தார்.

“.. சார்.. ரங்கராஜன் ஹியர்… ”
” ரங்கராஜன் .. ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு செண்ட்ரல் வரும்.. ”
” பத்து மணிக்கு சார் .. ”
” ம்.. ஒகே.. அங்க மந்திரி பேச ஆரம்பிச்சுட்டாரா ? ”
” ஆமா சார்… ஒரு ஐஞ்சு நிமிசம் இருக்கும்.. ”
” நான் சொல்றதை கவனமா கேளுங்க.. ஹைதராபாத்திலிருந்து ஸ்டூண்ட்ஸ் மாதிரி ஒரு குரூப் வருது.. அவங்க நோக்கம் அமைச்சர் ஆழியரசனை கடத்தறதோ அல்லது கொலை செய்யறதாவோ இருக்கலாம்னு இன்ட்லிஜென்ஸ் ரிப்போர்ட் வந்திருக்கு.. ” பேச்சை நிறுத்தி இடைவெளி கொடுத்தார்.
” சொல்லுங்க சார்.. ”
” அவங்க பயன்படுத்தற ரகசிய வார்த்தை .. 13 – ம் நம்பர் ரயில்வே கேட்’.. இதுல ஏதாவது புரியுதா ரங்கராஜன் ? ”
ரங்கராஜனுக்கு குழப்பமாயிருந்தது. ” இப்ப ஒன்னும் புரியல சார் ”
” ஒகே.. அத அப்புறம் யோசிக்கலாம்… அமைச்சருக்கு பாதுகாப்பை பலப்படுத்துங்க.. நான் திரும்ப கூப்பிடுறேன்..”
ரங்கராஜன் யோசிக்க ஆரம்பித்தார். என்ன இது 13 – ம் நம்பர் கேட்.. ? செல் போன் ஒலித்தது.
“.. ரங்கராஜன் .. நான் இன்ஸ்பெக்டர் பலராமன் … ”
” ஆங்.. சொல்லுங்க பலராமன் .. ”
” கமிஷ்னர் இப்பதான் சொன்னாரு.. அமைச்சர் பாதுகாப்புக்காக கூடுதல் செக்யூரிட்டி போர்ஸோட அங்க வந்திட்டு இருக்கேன். ”
” ஒகே.. வாங்க.. நான் ஸ்பாட்லதான் இருக்கேன்.. ” .
ரங்கராஜன் யோசிக்க ஆரம்பித்தார். சென்ட்ரல் ஸ்டேசனிலிருந்து 13 – வது ரயில்வே கேட்ல ஏதாவது பிளான் பண்ணியிருப்பாங்களோ ? அல்லது வேறு ஏதாவது பிளானா ?
சரி.. முதல்ல அமைச்சரை பாதுகாப்பா கொண்டு போய் சேர்ப்போம். மேடையை பார்த்தார். அமைச்சர் இன்னும் பேசி கொண்டிருந்தார்.
அமைச்சரின் பிஏ -வை தேடினார். மேடையிலிருந்து தள்ளி நின்று சிகரெட் புகைத்து கொண்டிருந்ததை கவனித்தார். இன்ஸ்பெக்டர் வருவதை பார்த்ததும் சிகரெட் பிடித்திருந்த கையை உயர்த்தி புன்னகைத்தார்.
“ரங்கராஜன் சார்.. சௌக்யமா ?
” நல்லா இருக்கேன் ராஜதுரை சார்.. அப்புறம் அமைச்சர் கூட்டம் முடிஞ்ச உடனே வீட்டுக்குத்தானே போறாரு ? வேறு ஏதாவது வெளியூர் கூட்டம் கிளம்புற புரோகிராம் இல்லையே.. ”
ராஜதுரை இன்ஸ்பெக்டரை கூர்ந்து கவனித்தவாறே கேட்டார்.. ” ஏன் சார் ? கேட்கிறீங்க ? ”
இன்ஸ்பெக்டர் மெல்லிய குரலில் பாதுகாப்பு விசயத்தை சொன்னார். ராஜதுரையின் முகம் கலவரமானது.
தயங்கவாறே சொன்னார்.. ” சார்.. அமைச்சர் இப்ப திருமால்புரம் 13 – வது காலனிக்கு போவாரு… ”
” 13 – வது காலனியா.. ? ” ரங்கராஜன் கேள்வியான முகத்தோடு கேட்டார்.
” ஆமா சார்.. போன வாரம் எல்லா பத்திரிகையிலும் வரல.. ராஜஸ்ரீ நடிகையோட அமைச்சருக்கு தொடர்பு இருக்குன்னு.. நடிகை ராஜஸ்ரீ வீடு அங்கதான்”
” திருமால்புரம் 13 – வது காலனி எந்த ஏரியாவில இருக்கு ? ” ரங்கராஜன் கேட்டார்.
” பட்டினவாக்கம் ரயில்வே லைன் பக்கத்துல வரும் சார்.. ”
ரங்கராஜனுக்கு ஏதோ பொறி தட்டியது. 13 -வது காலனி , ரயில்வேகேட் பக்கத்துல … அவசரமாய் மணி பார்த்தார். 09.25.
ரங்கராஜன் சுறுசுற்ப்பானார்.
(தொடரும்) ..  புதன் கிழமை தோறும்…

FOR FREE COLLEGE BOOKS : https://www.facebook.com/pages/Tamilagamtimes-Publications/750764068310150