13 -ம் நம்பர் ரயில்வே கேட்.. 2

இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் மணி பார்த்து கொண்டே யோசித்தார்.

இன்னும் அரை மணி நேரத்தில ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் செண்ட்ரல் ஸ்டேசன் வந்திரும்.
அமைச்சரின் உதவியாளர் ராஜதுரையிடம் இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“..சார் … விசயத்தை எப்படியாவது அமைச்சர்கிட்டே சொல்லி கூட்டத்தை கொஞ்சம் சீக்கிரமா முடிக்க சொல்லுங்க.. ப்ளீஸ் .. உங்க ஒத்துழைப்பு அவசியம் ” I777
ராஜதுரை மேடைநோக்கி நகர்ந்தார். அமைச்சரிடம் விசயத்தை ரகசியமாய் சொன்னார்.
” யோவ்.. நான் இன்னும் இந்த ஏரியா எம் எல் ஏ வை பத்தி ஒரு வார்த்தை கூட பேச ஆரம்பிக்கல… அதை சொல்லாம போனா ,,, என்னத்த கூட்டத்துல கிழிச்சீங்கன்னு மேலிடத்துல கேட்டா யார்யா பதில் சொல்றது ? போயி அந்த இன்ஸ்பெக்டரை ஒழுங்கா பாதுகாப்பு டூட்டியை பார்க்க சொல்லு.. ”
ராஜதுரை தலை குனிந்தவாறே மேடையிலிருந்து இறங்கி இன்ஸ்பெக்டரை நோக்கி வந்தார்.
“சார்.. என்னாலே முடிஞ்சவரை சொல்லிட்டேன்… அமைச்சர் கேட்கலை ” தயங்கியவாறே சொன்னார் ராஜதுரை.
இன்ஸ்பெக்டர் செல்போன் அடித்தது.
” ரங்கராஜன் … என்ன ஆச்சு ? ” கமிஷ்னர் கேட்டார்.
” சார்.. அமைச்சர் நாம சொல்றதை கேட்கலை சார் ”
கமிஷ்னரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
” சார்.. என்ன பண்ணலாம்..” ரங்கராஜன் கேட்டார்.
‘ கொஞ்சம் பொறுங்க … நான் திரும்ப கூப்பிடுறேன்.. ‘ என்று கமிஷ்னர் லைனை துண்டித்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்…
ரயில் அறிவிப்புகளும் – பயணிகளின் பேச்சு சப்தமுமாய் அந்த ஹால் நிறைந்திருந்தது. ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் அப்போதுதான் பிளாட்பாரத்தில் வந்து நின்றது.
மாணவர்கள் போல் தோற்றமுடைய ஒரு குழு இறங்கி நடக்க ஆரம்பித்து. அவர்களுக்குள்ளே பேச ஆரம்பித்தனர்.
” பேர் என்ன ? ” கூட்டத்தில் உயரமான ஒருவன் மற்றவர்களை கேட்டான்.
” நடிகை பேரா ”
” ஆமாம்.. ”
” ராஜ ஸ்ரீ ” . பிளாட்பார்ம்மில் சாதாரண உடையில் இருந்த போலீஸ் இவர்கள் பேச்சை கவனித்து கமிஷ்னருக்கு போன் செய்தனர். அந்த குழு மக்களோடு மக்களாக கலந்து போக ஆரம்பித்தது.

மேடையில் பேசிவிட்டு அமர்ந்த அமைச்சர் ஆழிநாதன் செல்போன் அடித்தது.
‘ என்ன இன்னும் கூட்டம் முடியலியா ? ” நடிகை ராஜஸ்ரீ.
கைவிரல்களை குவித்து – வாயருகே செல்போனை வைத்து கொண்டே பேசினார்… ” இல்ல செல்லம்.. இப்ப முடிஞ்சுறும் ”
” என் மானத்தை வாங்குறதுக்காக இன்னும் எத்தனை போலீசை என் வீட்டை சுத்தி நிறுத்துவ.. ” கோபமாய் கேட்டாள் ராஜஸ்ரீ.
” என்னது போலீஸ் வீட்டை சுத்தி நிக்குதா ” புரியாமல் கேட்டார் அமைச்சர். அதற்குள் செல்போன் கட் ஆனது.
ஆழிநாதன் கமிஷ்னருக்கு போன் போட்டார்.
” யாரை கேட்டு ராஜஸ்ரீ வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டீங்க… என்னை அவமானபடுத்த பார்க்கிறீங்களா ? ”
” சார்.. ஒரு முக்கியமான செக்யுரிட்டி நியூஸ்.. போன்ல சொல்ல முடியாது… ப்ளீஸ் … புரிஞ்சுக்கோங்க சார்.. ” கமிஷ்னர் போனில் கெஞ்சினார்.
அமைச்சர் போனை கட் பண்ணிவிட்டு எழுந்தார். வேகமாய் மேடையைவிட்டு இறங்கி – காரை நோக்கி நடந்தார்.

திருமால் புரம் – 13 வது காலனி …
நடிகை ராஜஸ்ரீ வீட்டின் அருகே ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து கும்பலாக சிலர் இறங்கினர். கைகளில் பெட்ரோல் பாட்டில்களும் – கைத்தடிகளுமாக இறங்கினர்.
தூரத்தில் நின்றிருந்த பாதுகாப்பு போலீஸ் அதை கவனித்து வேகமாக அவர்களை நோக்கி வந்தது.
தொடரும்.. ( புதன் தோறும் )

முந்தைய அத்யாயம் 13 -ம் நம்பர் ரயில்வே கேட்.. 1 : http://tamilagamtimes.com/13-ம்-நம்பர்-ரயில்வே-கேட்-1/