13 ம் நம்பர் ரயில்வே கேட் … 3

 

போலீஸ் வேகமாக தங்களை நோக்கி முன்னேறி வருவதை கண்டு, கூட்டத்தில் முன்னால் வந்து கொண்டிருந்தவர் ஆவேசமாக கத்தினார், ” எங்கள் தலைவரோடு நடிக்க மறுத்த ராஜஸ்ரீ பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல்… ” என கூறி கையிலிருந்த பெட்ரோல் பாட்டில்களை உயர்த்தி காட்டினார்.
அதற்குள் போலீஸ் வேகமாய் பக்கத்தில் வந்து, ” யோவ் ! நில்லுங்ககய்யா… எங்கேயிருந்துய்யா வர்றீங்க ? … ” என்றபடியே ஒரு போலீஸ்காரர் தடுத்தார்.

Image result for railway track” சார்… நான் அனைத்திந்திய நடிகர் அம்பாரி ராஜன் ரசிகர் மன்ற தலைவர்… எங்க மன்றம் சார்பா ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தோம் சார்… ” என்றான் கூட்டத்தில் முன்னால் நின்றிருந்தவன்.
” ஏன்யா … ஆர்பாட்டத்துக்கு பெர்மிசனும் வாங்கம… கையில ஆயுதங்களோட… இந்த நேரத்துல … என்னய்யா நினைச்சுக்கிட்டு இருகீங்க ? ” என்றார் போலீஸ்காரர்.
தன் குரலை தாழ்த்தி, ” ஐயா… தப்பா நினக்காதீங்க… முன்கூட்டியே பத்திரிகைகாரங்க – டி வி எல்லாத்துக்கும் தகவல் கொடுத்துட்டு வந்ததால .. அவங்க முன்னாடி ஒரு கெத்துக்கு இப்படி வந்துட்டோம்… தலைவர்கிட்ட ஆர்பாட்டத்துக்கு பணம் வாங்கிட்டு சும்மா வந்தா எப்படி ? அதனால… ” அவன் சொல்லி முடிக்கும் முன் போலீஸ்காரர் கேட்டார்..
” எதுக்குய்யா ஆர்ப்பாட்டம் ? ”
” சார்.. எங்க தலைவர் அம்பாரி ராஜன் பேமஸ் ஆனதே நடிகைகளோட முத்த காட்சியில நடிச்சுதான்.. ஆனா இந்த ராஜஸ்ரீ மட்டும் எங்க நடிகரோட முத்த காட்சியில நடிக்க மறுத்தா என்ன அர்த்தம் சார்.. ”
போலீஸ் ஏதோ சொல்ல வாயெடுத்த நேரம் , போலீஸ் ஜீப்கள் வரும் சப்தம் கேட்டது.
முதல் ஜீப்பிலிருந்து இன்ஸ்பெக்டர் ரங்கராஜனும், இரண்டாவது ஜீப்பிலிருந்து கமிஷ்னரும் வேகமாய் இறங்கினார்கள். கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போலீஸ்காரர் இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அவர்களை நோக்கி உத்யோக மரியாதையுடன் வேகமாய் வந்தார்.
“என்ன அங்க கூட்டம் ” ரங்கராஜன் வந்தவரிடம் கேட்டார்.
சொன்னார்.
” சரி… சீக்கிரம் கிளம்பி போகச் சொல்லுங்க.. ” சொல்லிவிட்டு கமிஷ்னர் ஜீப்பை நோக்கி நகர்ந்தார்.
” சார்… முக்கியமான விசயம் ஒன்னும் இல்ல சார்… நடிகரோட ரசிகர்கள்தான் … ” என்று சொல்லிவிட்டு கமிஷ்னரை பார்த்தார்.
கமிஷ்னர் கேட்டார் , ” ரங்கராஜன் … சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்ல , ஆந்திராவிலேயிருந்து வந்த பசங்க நடிகை ராஜஸ்ரீயோட பேரை சொன்னதா சொன்னீங்க இல்ல… அவங்க யாரு ? ”
” சார்… விசாரிச்சதுல அவங்க ஆந்திரா யுனிவர்சிட்டி ஸ்டூடண்ட்ஸ்… ஒரு கல்ச்சுரல் புரோக்கிராமுக்காக வந்திருக்காங்க… அதுல நடிகை ராஜஸ்ரீயும் கலந்துக்குறாங்க… ” என்றார்
கமிஷ்னர் சிகரெட் புகையை ஆழமாய் இழுத்து மூக்கின் வழியாக புகை விட்டுகொண்டே கேட்டு கொண்டிருந்தார்.
” ரங்கராஜன் … ’13 ம் நம்பர் ரயில்வே கேட் ‘ -னு அவங்க சொல்ற வைச்சு ஏதாவது யூகிக்க முடியுதா ? ” கமிஷ்னர் கேட்டார்.
” சார்.. போன வாரம் இண்டெலிஜெண்ட்ஸ் மீட்டிங்ல கலந்துக்கிட்டப்ப, அவங்க சொன்ன ஒரு விசயம் என்னன்னா, எந்த ஒரு ரகசிய வார்த்தையையும் தனித் தனியாத்தான் பொருள் பார்க்கனும்.. ஒரே வாக்கியமா பார்த்தா நம்ம கவனம் திசை திரும்பிரும்.. அப்படின்னு சொன்னாங்க…அப்படி பார்த்தா 13 ம் நம்பர் ரயில்வே கேட் – ங்கற வார்த்தைய நாம ரயில்வே கேட் அப்படிங்கற அர்த்தத்துல பார்க்காம வேற கோணத்துல விசாரிக்கனும்னு தோணுது சார்.. ” என்று நிறுத்தினார் ரங்கராஜன்.

கமிஷ்னர் கேட்டார், “நீங்க எப்படி பார்க்கிறீங்க ரங்கராஜன் ? ”
“.. சார்… அரசு பணிகள்ல தீவிரவாதிகள பணியாளர்களா வேலைக்கு சேர்த்து – அதன் மூலமா அரசு இயந்திரத்தை முடக்கி – மறைமுக போர் நடத்தலாம்னு திட்டம் தீட்டியிருக்கலாம் இல்லையா ?… 13 ம் நம்பர் ஏன் ஒரு ஆளா இருக்க கூடாது ? ” சொல்லிவிட்டு தன் பேச்சை நிறுத்தினார் ரங்கராஜன்.
” வாவ்.. பெண்டாஸ்டிக் … சரி ரங்கராஜன்… இதுல அமைச்சர் ஆழியரசன் எங்கே வர்றார் ? ” ஆர்வமாய் கேட்டார் கமிஷ்னர்.
” சார்… அமைச்சரோட இலாகாவுக்கு இப்ப ஆள் எடுக்க போறதா சொல்லியிருக்கார்… இவர் தமிழ்நாட்டை சேர்ந்த ரயில்வே துணை அமைச்சர் … ”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் கார் வந்து நின்றது.

தொடரும்…  புதன் தோறும் ..

13 ம் நம்பர் ரயில்வே கேட் … 2

13 ம் நம்பர் ரயில்வே கேட்…. 1

மேலும் தொடர்கள் கதைகள் மற்றும் செய்திகளுக்கு www.tamilagamtimes.com