13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4

Image result for railway gateஅமைச்சரின் காரிலிருந்து டிரைவர் இறங்கி வருவதை பார்த்து கமிஷ்னர் காரை நோக்கி விரைந்தார்.

காரின் பின் சீட்டை கவனித்தார். யாரும் இல்லை.

“.. சார் … அமைச்சர் உங்களை கூட்டிட்டு வரச்சொன்னார்… ” டிரைவர் சொன்னார்.
” அமைச்சர் இப்ப எங்கே இருக்கார்.. ” கமிஷ்னர் கேட்டார்.
“கெஸ்ட் ஹவுஸ் சார்..”
“… சரி… வர்றேன் … ”
“.. இல்ல சார்… உங்க கார் வேண்டாம்… நம்ம கார்ல வரச் சொன்னார்… ”
கமிஷ்னர் யோசித்தார். ” சரி… போகலாம் ” என்றவர் , திரும்பி , ” ரங்கராஜன்…” கூப்பிட்டார்.
“சார்..” சொல்லிகொண்டே ஒடி வந்தார் ரங்கராஜன்.
” அமைச்சர பார்த்துட்டு வர்றேன்… நீங்க வண்டியை எடுத்துட்டு கிளம்புங்க ” என்றார்.
” ஒகே… சார்… ” ரங்கராஜன் சல்யூட் அடித்துவிட்டு கிளம்பினார். அமைச்சர் காரில் ஏறி கமிஷ்னர் கிளம்பினார்.

கார் மகாலிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது. டிரைவர் காரில் எப் எம் ரேடியோ ஒலித்து கொண்டிருந்தது. இரவு நேரத்து ரகசியமாய் கொஞ்சும் குரலில் அறிவிப்பாளர் பேசிக்கொண்டிருந்தார்.
கார் அமைச்சரின் கெஸ்ட் ஹவுஸுக்குள் நுழைந்தது.

அமைச்சரின் அறையில்…
” கமிஷ்னர் … இந்த மெயில் லெட்டரை படிங்க.. ” ஆழிநாதன் ஒரு லெட்டரை கொடுத்தார். அமைச்சரின் இ மெயிலிருந்து பிரிண்ட் எடுத்திருந்தது.
அந்த லெட்டரில் ..

ஐயா ஆழிநாதன் அவர்களுக்கு ,

ஏற்கனவே நாங்கள் இதற்கு முன் அனுப்பிய கோரிக்கைகளை வரும் அக்டோபர் 2 ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்..

இப்படிக்கு
13 ம் நம்பர் ரயில்வே கேட்

லெட்டரை படித்துவிட்டு அமைச்சரிடம் கொடுத்தார்..

‘..சார் … ஏற்கனவே இந்த 13 ம் நம்பர் ரயில்வே கேட் அப்படின்னு சங்கேத பாஷையில் ரயில்ல பேசிக்கிட்டு வந்த ஒரு ஸ்டூடண்ட்ஸ் குரூப்பை பாலோ பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்… உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா ?” என்றார் கமிஷ்னர்.

” யாரை சொல்றது கமிஷ்னர் சார் ? பொது வாழ்க்கையில் இருக்கோம்… ” என்றார் ஆழிநாதன்.
” சார்.. அந்த ஸ்டூடண்ட்ஸை விசாரிக்கலாம்னு இருக்கிறோம்.. அதுல ஏதாவது விசயம் கிடைக்குதான்னு பார்ப்போம். ” என்றார் கமிஷ்னர்.
அமைச்சர் உடனே , ” நோ நோ கமிஷ்னர்.. இப்ப எலக்சன் டைம்.. நீங்க ஏதாவது விசாரிக்க போயி … அதுவும் ஸ்டூடண்ட்ஸ்… வேண்டாம் கமிஷ்னர்”
” நோ பிராபளம் சார்… நான் விசாரிக்கிற முறை கொஞ்சம் வித்தியாசமானது… அடிக்க மாட்டோம்… வயலண்டா பேச மாட்டோம்… ஆனா உண்மையை வர வழைப்போம்… இந்த முறையிலதான் ஸ்காட்லாண்ட் போலீஸ் விசாரிக்கிறாங்க… எனக்கு ஸ்பெசல் டிரெயினிங்க் இருக்கு சார்.. ” என்றார் கமிஷ்னர்.

அது எப்படி என்பது போல் புரியாமல் பார்த்தார் ஆழிநாதன்.

” நாளைக்கு நேர்ல ஆபிஸ்க்கு வாங்க … நீங்களே பார்க்கலாம்.. ” என்றார் கமிஷ்னர். சொல்லிவிட்டு கிளம்பினார்.

அது எப்படி அடிக்காம குற்றவாளிகிட்டயிருந்து உண்மையை வரவழைக்கிற வழிமுறை ? யோசித்தார் ஆழிநாதன்.

தொடரும்… அடுத்த இதழ் 02 / 09 / 15

முந்தைய அத்தியாயத்திற்கு… 3

FOR BOOKS VISIT https://www.facebook.com/pages/Tamilagamtimes-Publications/750764068310150?ref=hl

முந்தைய அத்யாயம் 13 -ம் நம்பர் ரயில்வே கேட்.. 3 : http://tamilagamtimes.com/13-ம்-நம்பர்-ரயில்வே-கேட்-3/