சுய ஜாதகங்கள் ….. ( DEFINE YOUR OWN HOROSCOPE )


இவ்வளவு காலத்தில் பூ பூக்கும்; இன்ன காலத்தில் காய் காய்க்கும் என இந்த தாவர இனங்களின் உயிரின காலம் நாம் கணித்து விடக் கூடிய ஒன்றுதான். ஆனால் நம் வாழ்க்கை பற்றிய விளைவுகளை கணித்து சொல்ல நாம் தாவர இனமல்ல. பிரபஞ்ச நியதிகளொடு – பௌதீக வாழ்க்கை வாழ்க்கை வாழும் உயிரினம் நாம்.
ஜோதிடம் மூலம் மனித வாழ்வு நிகழ்வுகள் கணிக்கப்படுவது சாத்தியம் என்றால் ஜோதிடத்தின் 12 ராசி அமைப்புகளுக்குள் உலகின் அனைத்து மனிதர்களையும் முறைப்படுத்தி, ஹிட்லர்களையும், கோட்சேக்களையும் பிறந்தவுடன் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா ? அப்படி இது வரை எந்த குற்றவாளிகளையும் ஜாதகம் கொண்டு கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.
அம்பானிகளும் – டாட்டாக்களும் – பிர்லாக்களும் ஜோதிடர்கள் குறிப்பில் வாழ்க்கை தொடங்கியவர்கள் இல்லை. தகுதியான சூழ்நிலை வாய்ப்புகளை கண்டறிதல் – வாய்ப்புகளை பயிற்சி பெற்ற சூழ்நிலை அறிவோடு பயன்படுத்துதல் – கால மாற்றங்களில் தன் மன தகவமைப்பை பொருத்தி மாறுதல்களை புரிந்துகொள்ளுதல் என வாழ்க்கை நுணுக்க பயிற்சிகளில்தான் நம் வாழ்க்கை மதிப்பு மிகுந்த பதிவாகும்.
சூழ் நிலைகளில் தரம் மாறும் குணம் – ஆசைகளில் தளர்ந்து விடும் வாழ்க்கை கோட்பாடுகள் – தேவைகளை முன்னிறுத்தி வாழ்க்கை இலக்கு மாற்றும் சந்தர்ப்ப அறிவு என ஏராளமான புதிர்களோடு தினமும் விடை தேடுகிறோம்.
வெற்றி அடைந்த மனிதர்களின் வாழ்க்கை உதாரணங்கள் – பொதுவான வெற்றிக் கோட்பாடுகள் – நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவது போன்ற மாயை உண்டு செய்யும் வசீகர வார்த்தை, வணிக புத்தக விற்பனை அல்ல இந்த கட்டுரையின் நோக்கம்.
ஒவ்வொரு தனி மனித வாழ்க்கை வளர்ச்சியும், சிறு வயதில் அவர்களின் மனம் உருவாகும் கால அளவையும் – சூழ் நிலையையும் – சூழ் நிலையில் பதிவாகும் சூழ் நிலை தாக்கங்களையும் – பரிச்சய மனிதர்களின் கருத்து பதிவுகளையும் கொண்டு உருவான மன அமைப்பை சார்ந்து அமையும். ஆதலால்தான் பொதுவான தன்னம்பிக்கை புத்தகங்கள் – பொதுவான மத கோட்பாடுகள் நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பொருந்துவதில்லை. இத்தனை மதங்கள் – தத்துவங்கள் – ஞானிகள் தோன்றியும், இந்த மனித வாழ்க்கை சூட்சுமம் சாமான்யர்கள் அறியாமலேயே வாழ்க்கை முடிகிறது.
ஆக நம் சூட்சும கருத்து பதிவு கொண்ட நம் ஆழ் மன அமைப்பிற்கேற்ற இலக்கு நிர்ணயம் செய்து – அதற்கேற்ற வெற்றி பாதை குறிக்கோள் அமைத்து கொண்டால் வெற்றி நம் வசப்படுவது எளிதல்லவா ?
நமக்கேற்ற இலக்கு நிர்ணயம் செய்வது – அதை அடைய உரிய பாதை தேர்ந்தெடுப்பது – இறுதி வரை வலிமையுடனும் – நேர்மையுடனும் சென்று இலக்கு அடைவது எப்படி என நம் இணையம் வாசகர்களின் வழிகாட்டியாக துணைவர தயாராகிறது.
பிரபஞ்ச பொது நியதிகளோடு பொருந்திய வாழ்க்கை இலக்கு / வாழ்க்கை வழிகாட்டி அமைக்க தொடர்பு கொள்ளுங்கள். மேலும் தங்களின் வாழ்க்கை சவால்கள் கல்வி , குடும்பம், உத்யோகம் , திருமணம் வாழ்க்கையின் எந்த தளத்தில் சாவால்கள் இருந்தாலும் அறிவியல் பூர்வமான – தீர்வுகளை நிபுணர்களின் உதவியோடு தருகிறோம்.
உங்கள் ஜாதங்கள் இல்லாமல் உங்கள் பிரச்சனைகளை விஞ்ஞானப் பூர்வமான ஆய்வு செய்து தீர்வு தருகிறோம்.
எழுதுங்கள் : editor@tamilagamtimes.com
Posted in உளவியல் ஜாதகம்