தண்டனை சட்டங்கள் லஞ்சத்தை ஒழிக்குமா ?


இந்த வழியா போனா ஊழல் இல்லாத ஊருக்கு போயிரலாமா ? சமான்யனுக்கு இந்த ராம் தேவ் போராட்ட முறை புரியவில்லை.

தாக்கங்களை உண்டு செய்வது – எதிர்ப்புணர்ச்சி ஏற்படுத்துவது என்ற அளவில் இந்த நிகழ்வுகள் முடிந்துவிடுகிறது. மாற்று வழி சொல்லி தராமல் தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் ஊழலுக்கு எதிராக ஏதோ செய்தோம் என்ற வரலாற்று பதிவு செய்வதால் யாருக்கு பயன் ?

ஊழலுக்கும் / பதுக்கப்பட்ட பணத்திற்கும் எதிரான ஒரு விழிப்போட்டத்தை நம்மிடையே உண்டு செய்வதில் சமூக ஆர்வலர்களாக தங்களை கூறிக்கொள்பவர்கள் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விமர்சனம் செய்தால் நாம் மிக எளிதாக தேச விரோதியாக முத்திரை பெற்றுவிடுவோம். ஆனால், உண்மையிலேயே இந்த குறைகளை களைந்து சமூகத்தையும் – சமூகத்தின் சார்பு அமைப்பான அரசியலையும் மிகைப்படுத்தப்படாத – யதார்த்தமான நேர்மையோடு ( REAL HONEST ) கொண்டு செல்ல விரும்புகிறவர்கள் சற்று விரிவாக சவால்களை ஆராய வேண்டியது அவசியமல்லவா ?

நம் சக உயிரினங்களான தாவரம் மற்றும் விலங்குகள் கூட தம் உயிர் வாழ்நாள் முழுவதும் உயிர் பரிணாமத் தேவைக்கேற்ப அன்றாடம் சக்தி பெற்று உயிர்வாழும் நேர்மை இருக்கிறது. ஆனால், ஆறாவது அறிவு பௌதீகம் கொண்ட மனித இனம் எப்படி முரண் வாழ்க்கை கற்றது என புரியவில்லை.

சமூகம் என நாம் கூறும் மனித கூட்டமைப்பிலிருந்து தயாராகி அரசியலுக்குள்ளும் / அரசு பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். இவர்கள், அரசியலமைப்பின் அந்த பதவிக்குறிய தனிநபர் ஊதிய விதிகளை மீறி ஈட்டிய பணம்தான் லஞ்சம் என கூறப்படுகிறது அல்லவா ? விதிகளை மீறி இவர்கள் பணம் ஈட்ட வேண்டிய மனநிலை நிர்ப்பந்தம் என்ன ? சமூக – உளவியல் காரணங்களை ஆராயாமல் வெறும் தண்டனை பயமுறுத்தல் மூலம் எப்படி இதை நீக்க முடியும்.

ஒரு வியாபாரி தன் பொருளை விற்று அதிக லாபம் சம்பாதிப்பது வியாபார சாமர்த்தியமா ?

லஞ்சத்திற்கான ஊற்றுக்கண் எங்கு ஆரம்பிக்கிறது ? ஒரே பதவியில் இருக்கும் இரு வேறு அரசு ஊழியர்களின் குடும்ப சூழல்கள் – பொறுப்புகள் ஒரே அளவில் இருப்பதில்லை. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையும் மாறுபடும். பற்றாக்குறைகளை சமாளிக்க கையாளும் முறையில்தான் நேர்மை தடுமாறுகிறது. ஒரு சராசரி மனிதனின் உணவு தேவைக்கான பண மதிப்பு என அரசாங்கம் கணக்கிடுவதும் , நடைமுறை சந்தையில் பொருளின் விலையும் ( MARKET RATE ) வேறுபடுகிறது என்பது ஊதிய நிர்ணயம் செய்பவர்களுக்கு தெரியாதா ?

காலமாற்றத்திற்கு உட்படாத – பொருந்தாத அரசு விதிகளை இன்னும் அமுலில் வைத்திருப்பதால் மிக எளிதாக முடிக்கப்படவேண்டிய வேலைகள் மிகுந்த கால தாமதமாவது தவிர்க்க இயலாது. இது போன்ற அரசு சட்ட விதிகள் ஊழலுக்கு துணை போவது போராட்டகாரர்களுக்கு புரியுமா ?

இவை எல்லாவற்றையும் விட பணம் என நாம் குறிப்பிடும் சந்தை புழக்கத்திற்கான பொதுக் காரணியான காகித கருவியை ( PAPER INSTRUMENT ) நாம் பயன்படுத்தும் விதம் ( UTILIZATION OF MONEY ) சரிதானா ? ஒருவர் நேர்மையாக – நாணயமாக இருப்பதற்கும், பணம் கையாள ( MONEY HANDLING ) தெரிவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பணம் சுழற்சி முறை பயன்பாட்டில் ( MONEY CIRUCULATION ) இருந்தால்தான் எல்லாருக்கும் பயன்படும். காகிதங்கள் எளிதில் பதுக்கிவிடக் கூடிய காகித வடிவில் இருப்பதால் பதுக்கப்படுவதும் – அதன் காரணமாக பற்றாக்குறை ஏற்படுவதும் சமன்பாடில்லாத சமூக – அரசியல் தளம் அமைகிறது.

உற்பத்தி – விற்பனை – தனி மனித உறவு – மதிப்பீடு என எல்லாவற்றிற்கும் நாம் பொது மதிப்பாக பணத்தை காகிதமாக வைத்திருப்பது இன்னும் சரிதானா ? மிண்ணனு தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் வந்த காகித கண்டுபிடிப்பை இன்னும் பணமதிப்பீடுகளுக்கு பயன்படுத்துவதுதான் இத்தனை கோளாறுகளுக்கும் காரணம். உண்மையா ? இல்லையா ?

மிண்ணனு சாதன உபயோக வங்கி ( ELECTRONIC BANKING METHODS / E – COMMERCE ) முறை அமலுக்கு வந்த பின் இன்னும் நாம் காகித பண பரிமாற்றங்களை குறைத்துவிட முடியும். காகித பண பரிமாற்றம் குறைக்கப்பட்டால் காகித பண பதுக்கல் குறையும் – பண சுழற்சி பயன்பாடு அதிகமாகும்.

மிண்ணனு சாதன உற்பத்திக்காக உணவு விளைச்சலாகும் நிலங்களை கையகப்படுத்தும்போது நமக்கு பொருளாதார முரண்பாடுகள் ஏற்படும் என்பது புலப்படாதது ஆச்சர்யம்.

நெடு நாளைய நோய் எந்த மருந்திற்கும் குணப்படவில்லையென்றால் ; நம் பழக்கவழக்கங்களில் மாற்றம் வேண்டும் என்றுதானே அர்த்தமாகும் ?

மாற்று வழி சிந்திப்போம் !

EDITOR – editor@tamilagamtimes.com