உயிர் உறிஞ்சும் முத்தம்… 2 ( வியாழன் தோறும் )

வந்தனாவின் ஷாம்பூ கூந்தலை காற்று லேசாக கலைத்தது போக, மீதமிருந்த கூந்தலை கைவிரல்களால் அளாவியபடியே கேட்டான் வருண், ” வந்தனா… ஒன்னு கேட்கட்டுமா ?… ”
” … கேளு… ” அவன் முகத்தை நோக்கி திரும்பினாள்.
வந்தனாவின் கண்ணுக்கும் – கன்னத்திற்கும் அழகு போட்டி நடப்பது போல் இரண்டும் வெட்கத்தில் நனைந்திருந்தது. Image result for deep mouth kiss
“… உதடுகள் ஏன் வியர்ப்பதில்லை… தெரியுமா ? ”
“.. தெரியாது… ”
“.. வெந்நீர் இருக்கும் கோப்பை வியர்க்கும்… அதைவிட வெப்பமான மது இருக்கும் கோப்பை வியர்க்காது… ” என்றான் வருண்.
சிரித்து கொண்டே, ” வருண்… எச்சில் மதுவாகுமா ? ” வந்தனா கேட்டாள்.
“… வியர்வை ரசமாகும்… எச்சில் மதுவாகும்.. காமம் உடலில் சமபந்தி பரிமாறும்போது இதெல்லம் சகஜமாகும்.. ” என்றான் வருண்.
புல் தரையில் படுத்திருந்த வந்தனா , புரண்டு எழுந்தாள்.
பூக்கள் புற்களுக்கு சுமையாவதில்லை. ஆனால், வந்தனாவின் ஆடைகளை மட்டுமே தொட முடிந்ததால் புற்கள் சற்றே சோர்ந்து சாய்ந்தன.

“..வருண்… கிளம்பலாமா ? ” கேட்டுகொண்டே எழுந்தாள் வந்தனா.
“…ம் … அப்புறம் வந்தனா.. நாளைக்கு கல்ச்சுரல் புரோகிராம் … மறந்திராத .. ” சொல்லிக்கொண்டே பைக்கை நோக்கி நடந்தான் வருண். இருவரும் பைக்கில் ஏறி புறப்பட்டனர்.

சென்னை ஏர்போர்ட் ... மாலை மணி ஆறு..

கருணாகரனும் – பலராமனும் ஏர்போர்ட்டின் கார் பார்க்கிங் ஏரியாவில் நின்று கொண்டிருந்தனர். பலராமன் செல்போனில் யாருக்கோ கூப்பிட ஆரம்பித்தபோது,
“… ஹலோ பலராமன் ” குரல் கேட்டு நிமிர்ந்தார். டாக்டர் ராகவன் நின்றிருந்தார். டாக்டர் ராகவன் உடல் அமைப்பில் நடிகர் மதன்பாபுவை நினைவுபடுத்தினார்.
“.. ஹாய் ராகவன்… எப்படி இருக்கிறீங்க ? … ” கை கொடுத்துவிட்டு , கருணாகரன் பக்கம் திரும்பி, ” மீட் மிஸ்டர் ராகவன்.. சென்னையில பிரபல சைக்காலஜிஸ்ட் டாக்டர்.. நம்முடைய புராஜெக்ட்ல பெரிய உதவியா இருக்கிறவர்.. ” டாக்டர் ராகவனை அறிமுகப்படுத்தினார்.
கருணாகரனும் – ராகவனும் கை கொடுத்து வணக்கம் பரிமாறிக் கொண்டனர். ராகவனின் காரில் மூவரும் ஏறி புறப்பட்டனர்.
கார் வடபழனி ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
“.. ராகவன் … வருண் , வந்தனா இரண்டு பேருக்குமே நாம அவங்கள இந்த புராக்ஜெட்ல பயன்படுத்தறது தெரியுமா ? ” பலராமன் கேட்டார்.
” நோ.. தெரியாது… ”
“.. அப்ப .. அது மனித உரிமை மீறல் ஆகாதா ? சட்டப்படி தப்பாகாதா ? ” கருணாகரன் கேட்டார்.
” சார்.. அவங்க இந்த புராக்ஜெட்ல பங்கெடுக்கற விசயம்.. நம்ம மூணு பேருக்கு மட்டுந்தான் தெரியும்.. மேலும் அவங்களோட எந்த பயலாஜிக்கல் இன்பர்மேசனும் – அவங்கள பத்தின விசயங்களயும் அவங்ககிட்டயிருந்து எடுக்கவோ – வேறு யார்கிட்டயும் பகிந்துக்கவோ இல்ல… சோ இட் இஸ் நாட் எ ஹுயுமன் ரைட்ஸ் வைலேசன்… ” என்றார் ராகவன். சிக்னலில் வண்டி நின்றது.
” ராகவன்.. முத்தத்தினால சைக்கிலாஜிக்கல் இம்பாக்ட் உண்டு பண்ண முடியுமா ? ” என்று கேட்டார் பலராமன்.
” முடியும்… மனித உடல்ல இருக்கிற முக்கியமான உணர்வு மையங்கள்ல மென்மையா அல்லது கொஞ்சம் அழுத்தமா முத்தம் கொடுத்து உணர்வுகள மாத்த முடியும்… உடலோட எந்த இடத்துல முத்தம் கொடுத்தா எந்த மாதிரி உணர்வு எழும்னு ஒரு பெரிய தியரியே இருக்கு பலராமன்… அவ்வளவு ஏன் ? வருண் – வந்தனா இரண்டு பேரையும் வைச்சு என்னால நீருபிக்க முடியும்.. ”
ராகவனின் கெஸ்ட் ஹவுஸில் கார் வந்து நின்றது.
” நீங்க ரெண்டு பேரும் இங்க இருங்க.. நாளைக்கு காலைல நாம ஒரு கல்ச்சுரல் புரோகிராமுக்கு போறோம். அங்க வருண் – வந்தனா ரெண்டு பேரையும் சந்திக்கிறோம். நான் வர்ரேன்.. ” சொல்லிவிட்டு கிளம்பினார் ராகவன்.

சென்னையின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில்…
சல்மான் தன் எதிரே இருந்தவரிடம் கேட்டான், ” சொல்லுங்க பர்வேஸ் … எப்படி வருணையும் – வந்தனாவையும் சந்திக்க வைக்க போறீங்க.. ”
“.. நாளைக்கு ஒரு கல்ச்சுரல் புரோகிராம்ல அவங்க கலந்திருக்கிறாங்க… அங்க நம்ம கூல் டிரிங்ஸ் புராடக்ட்டை அவங்ககிட்ட கொடுத்து அறிமுகப்படுத்துறோம்.. அங்கயிருந்து நம்ம புராஜெக்ட் தொடங்குது .”
” ரைட் பர்வேஸ்… அந்த செல்லுலார் கம்பெனியும் அங்க வர்றாங்க இல்ல… ”
” ஆமா… டச் ஸ்கிரீனை தொட்டு தொட்டு மனித உறவுகள இழக்க செய்யுற புராஜெக்ட்டை அவங்க ஆரம்பிக்கறாங்க… ”
” ரைட் .. அப்ப நாம காலைல அங்க மீட் பண்ணலாம்.. ” சல்மான் சொல்லவும் பர்வேஸ் எழுந்து விடை பெற்றான்.
தொடரும்… NEXT ISSUE ON 03 / 09 / 15

முந்தைய அத்தியாயங்களை படிக்க…

உயிர் உறிஞ்சும் முத்தம் … 1

FOR BOOKS https://www.facebook.com/pages/Tamilagamtimes-Publications/750764068310150