உயிர் பானம்( தொடர் )

[subscribe2]

சுய இன்பம் அனுபவித்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி டாக்டர்கள் வெளியிடும் பட்டியல் நீண்டுகொண்டே போக, பெற்றோர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. பலரும் ரகசியமாகத் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். இது நோய் என்று அறிவித்த பிறகு, இதற் கான சிகிச்சை என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா? டாக்டர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினர்.

டாக்டர்கள் முதலில் குறிவைத்தது, உணவுப் பழக்கத்தை! அமெரிக்காவில் பிரபலமாக இருந்த டாக்டர் கார்கன் ‘நியூயார்க் மெடிக் கல் டைம்ஸ்’ பத்திரிகையில், 1896-ல் ஒரு கட்டுரை எழுதினார். ‘‘திருமணம் ஆகாத இளைஞர்களும், பெண்களும் இரவு நேர சாப்பாட்டில் பாலாடை, முட்டை, உப்பு, மிளகு, மீன், சர்க்கரை, வெங்காயம், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மது, காபி அருந்தக் கூடாது. இவை எல்லாம் நரம்புகளைத் தூண்டிவிட்டு செக்ஸ் உணர்வை ஏற்படுத்துகின்றன’’ என்றார் அவர்.

சில்வஸ்டர் கிரஹாம் என்ற மதபோதகர் செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்த,சைவ உணவை சாப்பிடச் சொன்னார். பாலீஷ்செய்யப்படாத கோதுமையை அரைத்து, அந்த மாவைசிறுசிறு வில்லைகள் போல் ஆக்கி, ‘கிரஹாம் கிராக்கர்ஸ்’ என்ற உணவை ஸ்பெஷலாக அவர் உருவாக்கினார். கிட்டத்தட்ட தவிடு மாதிரி இருக்கும். செக்ஸைக் குறைக்க இதை சாப்பிடச் சொன்னார் அவர். உப்பு, இனிப்பு எதுவும் இல்லாமல் இதை சாப்பிடுவதே ஒரு தண்டனை மாதிரி இருந்தது. போனால் போகிறது என்று, ‘கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுங்கள்’ என விதிவிலக்கு அளித்தார்.

இன்னொரு பக்கம் சில டாக்டர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். ‘என் பையன் தப்பு பண்றான்’ என கவலையோடு ஓர் இளைஞனை யாராவது டாக்டரிடம் கூட்டி வந்தால் போச்சு. அவன் மீது எல்லா பரிசோதனைகளையும் நடத்தி முடித்து விடுவார்கள். இதில் முதல்படி, குளியலில் ஆரம்பிக்கும். கொட்டும் பனியில், நடுக்கும் குளிரில், பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டுப் பையனைத் தூங்கச் சொல்வார்கள். உடம்பே விறைத்துக்கொள்ள பையன் நடுநடுங்கி விடுவான். காமத்தீயை இந்தக் குளிர்ந்த நீர் அடக்கிவிடும் என நினைத்தார்கள்.

இதற்கும் அடங்காத பையனாக இருந்தால், அவன் நிலைமை பாவம். தடிமனான ஒரு போர்வையைத் தண்ணீரில் நனைத்து ஈரம் சொட்டச்சொட்ட அதை போர்த்திக்கொண்டு தூங்கச் சொல்வார்கள். ஏதோ ஃபிரிஜுக்குள் நுழைந்துவிட்டது மாதிரி உணர்வு வர, தூக்கம் எங்கே வரும்?

இன்னும் சில டாக்டர்கள் ஏதாவது கஷ்டமான உடற்பயிற்சியை சொல்லிக் கொடுத்து, ‘‘தூங்கறதுக்கு முன்னாடி இதை ஆயிரம் தடவை செய்துடு கண்ணா’’ என்று அனுப்பி வைப்பார்கள். அப்பா கண் காணிக்க, அவர் முன்னால் ஆயிரம் தடவை இதை செய்து முடித்ததும் கண்ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்துவிடும். நடுவில் விழிப்பே வராது. அப்புறம் சுய இன்பத்துக்கு ஏது நேரம்?

வேறொரு சிகிச்சை… இரவு நேரத்தில் பையனை கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கட்டிப்போட்டுத் தூங்க வைப்பது. கைகள் கட்டப்பட்டிருக்க, பையனின் ஜட்டிக்குள் ஒரு தடிமனான நூல் கட்டப்பட்டு, அதன் இன்னொரு முனை அப்பாவின் அறைக்கு செல்லும். அந்த முனையில் மணி கட்டித் தொங்கவிடப்பட்டு இருக்கும். பையன் ஏதாவது தப்பு செய்ய முயன்றால், அப்பாவின் அறையில் மணி அடிக்கும். பையன் மாட்டிக் கொள்வான். சிலர் இதையே மின்சார இணைப்பு கொடுத்து, அலாரம் இணைத்து வைத்தி ருந்தார்கள்.

இதைவிட கொடூரமான இன்னொரு சிகிச்சை இருந் தது. எலிப்பொறி மாதிரி கூரான பற்களோடு ஒரு வளையம் இருக்கும். இதை ஆணுறுப்பின் மீது மாட்டி, இடுப்போடு இணைத்து ஒரு பூட்டுப் போட்டுப் பூட்டி விடுவார்கள். சாவி அப்பா கையில் இருக்கும். பரவசமான செக்ஸ் உணர்வு கிளர்ந்தால், இந்தக் கூரான பற்கள் குத்திக் காயப்படுத்திவிடும். அதனால் பையன் அடங்கி இருப்பான்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வில்லியம் ஆக்டன் என்ற டாக்டர் இருந்தார். இவர் ‘சுய இன்பத்தை’ தடுக்கும் அறுவை சிகிச்சைகளில் புகழ் பெற்றவர். ஆணுறுப்பின் மேற்புறத் தோலுக்குள் ஆபரேஷன் மூலம் மெல்லிய வெள்ளிக் கம்பியை நுழைத்து விடுவார் இவர். சுய இன்பம் அனுபவிக்கும் நோக்கத்தில் பையன் தொட்டால், வலி உயிர் போகும். இந்த வலிக்குப் பயந்து பையன்கள் கையைக் கட்டிக் கொண்டு அடங்கி இருந்தார்கள்.

இளம்பெண்களும் கூட டாக்டர்களிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டார்கள். இதில் பயங்கரமானது ‘கற்பு வளையம்’ எனப் படும் ஒரு பெல்ட். இரும்பில் செய்யபட்ட இந்த பெல்ட், ஒரு ஜட்டி மாதிரி இருக்கும். பெற்றோர்கள் பெண்ணுக்கு இதை மாட்டி விடுவார்கள். இடுப்புப் பக்கம் இருக்கும் வளையத்தை இறுக்கிப் பூட்டி விட்டால் அவிழ்க்க முடியாது. இயற்கை உபாதைக்காக சின்னதாக ஒரே ஒரு துவாரம் மட்டும் இருக்கும்.

இதுதவிர கொடூரங்கள் நீண்டன… பெண்ணுறுப்பில் சூடுவைத்துக் காய மாக்கி விடுவார்கள். காயமான இடத்தில் கைவைத்தால் வலிக்கும் என்பதால், பெண்கள் தொடமாட்டார்கள் என நினைத்தார்கள். இன்னும் சிலர் தையலே போட்டு பெண்ணுறுப்பை முக்கால்வாசி மூடினார்கள்.

சுய இன்பத்தை தடுக்கும் சில அந்த கால சாதனங்கள்…

1856-ல் தொடங்கி 1932 வரை இந்த மாதிரி சுய இன்பத்தை தடுக்கும் கருவிகள் முப்பத்துமூன்றுக்கு அமெரிக்கக் காப்புரிமை அலுவலகம் உரிமை கொடுத்திருந்தது! இதுதவிரவும், இன்னும் பல மாடல் கருவிகள் மார்க் கெட்டில் விற்றன.

சிகிச்சை என்ற பெயரில் டாக்டர்கள் மேற்கொண்ட கொடூரங்களுக்குப் பயந்தே பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இயல்பான ஒரு பழக்கத்தை நோய் என அடையாளம் காட்டி, ஆயிரக்கணக்கானவர்களை சாகடித்தது, வரலாற்றில் வேறு எப்போதும் நடக்காத கொடுமை.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் மருத்துவ உலகம் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆராய்ந்து சொல்லப்படும் உண்மைகளை மட்டுமே நம்ப ஆரம்பித்தது. மருத்துவப் புத்தகங் களில் ‘சுய இன்பம் தப்பான விஷயம்… பயங்கரமான நோய்’ என்று இருந்த பாடத்தை, 1940-ம் ஆண்டு நீக்கினர். அமெரிக்க அரசு வெளியிடும் ‘குழந்தைகள் பராமரிப்பு கையேட்டில்’ 1951-ம் ஆண்டு புதிதாக ஒரு அறிவுரையைச் சேர்த்தனர். ‘பிள்ளைகள் சுய இன்பம் அனுபவித்தால் அதைத் தடுக்காதீர்கள்’ என்பதுதான் அந்தப் புதிய அட்வைஸ். 1972-ம் ஆண்டு அமெரிக்க டாக்டர்கள் சங்கம், ‘சுய இன்பம் இயல்பான ஒரு பழக்கம்தான்’ என அறிவித்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுய இன்பம் தப்பு என்றோ, சரி என்றோ மருத்துவ நூல்கள் சொல்லவில்லை. ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதையில், ‘இச்சைகளை அடக்கக் கூடாது’ என்று இருக்கிறது. பழங் கால சிற்பங்களில்கூட சுய இன்பம் அனுபவிப்பது மாதிரி காட்சிகளைப் பார்க்கமுடியும். இந்தப் பழக்கத்துக்கு ‘பாநி மந்தன்’ என பெயர் வைத் திருக்கும் வாத்ஸாயனர், வயதான காலத்தில் செக்ஸ் அனுபவிக்கும் ஆசை உள்ளவர்களுக்கு இதைத் ஒரு தீர்வாக சொல்கிறார்.

நவீன கால செக்ஸ் சிகிச்சையிலும்கூட, சுய இன்பம் ஒரு சிகிச்சை முறையாக இருக்கிறது. நோய் என்று கருதப்பட்ட ஒரு பழக்கம், இப்போது மருந்தாக மாறி இருப்பதற்குக் காரணம் அறிவியல்தான்.

ஆனாலும் சில நம்பிக்கைகளை மாற்றுவது கஷ்டம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒரு நம்பிக் கையை ஐம்பது ஆண்டுகளில் மாற்றி விட முடியாது. ‘சுய இன்பம் தப்பில்லை’ என மக்கள் உணர்ந்து கொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கும்.

சுய இன்பம் அனுபவிப்பதைவிட, இது தப்பு என மனதில் தோன்றும் குற்ற உணர்வுதான் ஒருவரை மனநோயாளி ஆக்கும் அளவு ஆபத் தானது. விந்தணுவை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கொடுக்க, கடவுள் ரேஷன் ஆபீஸர் இல்லை. மனிதன் ஆரோக்கியமாக இருந்தால், அவன் சாகிற வரை இது சுரந்து கொண்டே இருக்கும். ஞாயிறு விடுமுறை எல்ல £ம் கிடையாது. அதனால் சுய இன் பத்தில் இது வீணாகி விட்டது என நினைக்க முடியாது.

ஆனால், மனதில் குற்றஉணர்வைக் கிளப்பி விட்டுக் காசு பார்க்க ஏகப்பட்ட போலி டாக்டர்கள் கிளம்பிவிட்டார்கள். ‘சுய இன்பம் அனுபவிப்பவர்களுக்கு ஆணுறுப்பு சிறியதாகிவிடும்’ என்பது உட்பட பல வதந்திகளைக் கிளப்பிவிட்டு இவர்கள் பணம் பறிக்கிறார்கள். இவர்கள் கிளப்பும் பீதியை வேதவாக்காக பலர் நம்பு கிறார்கள். சிகிச்சை செய்து கொள்ளும் வசதி இல்லையே என ஏங்கித் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தக் குற்ற உணர்வு வரக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு விவரமாக சொல்கிறேன். மனிதர்கள் மட்டுமில்லை… குரங்கு, முள்ளம்பன்றி, யானை, பூனை, நாய் என பல விலங்குகளுக்கு இந்தப் பழக்கம் உண்டு.

திருமணத்துக்கு முன்பு இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், தனிமையில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு- தியானம், தோட்ட வேலை, பகுதி நேர வேலை என வேறு எதிலாவது மனதை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும். அப்படி சரியாகாவிட்டால், அதற்குதான் சிகிச்சை அவசியம். ஒவ்வொரு வயதிலும் ஒரு பழக்கத்தை கடந்து வருவது மனித இயல்பு. அப்படி ஒரு இயல்புதான் இது. ‘இளமையில் சுய இன்பம் அனுபவித்தது இல்லை’ என சொல்கிற ஆசாமிகளில் பலர்தான் செக்ஸ் பிரச்னை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

[subscribe2]

 


 

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product
WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES
accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books
it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics