உயிர் பானம் ( தொடர் )

[subscribe2]

 

வளை அடையும் கணவன் மட்டுமே அந்த வேலியைத் தாண்டும் உரிமை உள்ளவன்’ என மத நூல்கள் வரையறுத்தன.

‘ஒரு பெண் முதல் தடவையாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது லேசான ரத்தக் கசிவு இருக்கும். இதற்குக் காரணம், அந்த உறுப்பின் மேலுறை மாதிரி இருக்கும் மெல்லிய ஒரு கவசம் கிழிவதுதான்’ என்பது அந்தக்கால மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு பிறகுதான் கட்டுப்பாடு வந்தது. ‘திருமணத் துக்கு முன் பெண்கள் செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது. கணவனு டன் இணைந்து முதலிரவில்தான் அவள் முதல்முறையாக செக்ஸை அனுப விக்க வேண்டும். அப்போதுதான் அவளது பிறப்பு உறுப்பின் கவசம் கிழிய வேண்டும்’ எனக் கட்டுப் பாடு கொண்டு வந்தார்கள்.

அந்த கவசம்தான் கன்னித்திரை! இதற்கு ஆங்கிலத்தில் ‘ஹைமென்’ ( Hymen ) என்று பெயர். கிரேக்கர்களின் திருமணக் கடவுளான ‘ஹைமெனியஸ்’ பெயரிலிருந்து தான் இந்த வார்த்தை வந்தது. ஒரு கையில் தீப்பந்தமும், இன்னொரு கையில் பூமாலையும் ஏந்தியிருக்கும் ஹைமெனியஸ்தான் ஓர் ஆணை யும், பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைத்து வைப்பதாக கிரேக்கர்கள் நம்பினார்கள். திருமண உறவின் மூலம் கிழிய வேண்டிய திரை என்பதால், திரு மணக் கடவுளின் பெயரிலிருந்து ‘ஹைமென்’ என்று இதற்கு நாம கரணம் ஆனது.

இப்படி கன்னித்திரை கிழிவ தும், அதன்மூலம் ரத்தக் கசிவை ஏற்படுத்துவதும்தான் முதலிரவில் நிகழவேண்டிய முக்கியமான சடங்கு என பல நாடுகளில் வழக்கமாகிவிட் டது. பழங்குடிகள், நாகரிகம் அடைந்தவர்கள் என எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

பழங்கால கிரீஸில் திருமணம் முடிந்த தும் பெண் வீட்டில்தான் முதலிரவு நடக்கும். முதலிரவுக்காகக் கட்டிலை அலங்கரிக்கும் போது தூய வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்பை அதில் போடுவார்கள். மறுநாள் காலை பெண்ணின் அம்மாவும், மணமக னின் அம்மாவும் ஒன்றாகச் சேர்ந்து அந்த அறைக்குள் போவார்கள். பெண்ணின் கன்னித்திரை கிழிந்து, அந்த ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பை பத்திரமாக எடுத்து வருவார்கள். அதை ஏதோ காட்சிப் பொருள் மாதிரி வீட்டுப் பால்கனியில் அல்லது ஜன்னலில் கட்டித் தொங்க விடுவார்கள். ரோட்டில் போகிற வருகிற எல்லோரது பார்வையிலும் அது படும். ‘நாங்கள் எங்கள் பெண்ணைப் பரிசுத்தமாக வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம்’ என அந்தக் குடும்பம் பெருமைப்பட்டுக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. எந்த வீட்டில் கல்யாணம் நடந்தாலும், ‘கறைபடிந்த படுக்கை விரிப்பு பால்கனியில் தொங்குகிறதா’ என்று மறுநாள் ஊர்க்காரர்கள் எல்லோரும் வந்து பார்ப்பது பழக்கமாக இருந்தது.

ஊர்க்காரர்கள் என்றில்லை… பெண்ணின் உறவினர் கள், மாப்பிள்ளையின் உறவினர்கள் என எல்லோரும் திருமணத்துக்கு மறுநாள் அந்த வீட்டுக்கு வருவார்கள். எல்லோருக்கும் விருந்து சாப்பாடு உண்டு. படுக்கை விரிப்பில் கறை படிந்திருப்பதை உறுதிசெய்து கொண்டு, விருந்தையும் சாப்பிட்ட பிறகு சந்தோஷமாக அவர்கள் கிளம்பிப் போவார்கள்.

இப்படி எல்லோரும் பார்த்து முடித்த பிறகு அந்த படுக்கை விரிப்பு பெண்ணின் சகோதரர் கையில் ஒப்படைக் கப்படும். அவர் அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். பின்னால் என்றைக்காவது சண்டை வந்தால், பஞ்சாயத்தில் அதை அவர் ஒரு ஆவணமாக ஒப்படைக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்வது சிரமம்.

ஒருவேளை ரத்தக்கறை இல்லை என்றால்… திருமண உறவை முறித்துக் கொள்ளும் உரிமை மணமகனின் வீட்டாருக்கு உண்டு. அது மட்டுமில்லை… அந்தப் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைப்பார்கள்.

இந்த பழக்கம் அப்படியே ரஷ்யா, எகிப்து, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் என பல பகுதிகளுக்கும் பரவியது. ஒவ்வொரு இடத்திலும் புதுப்புது விஷயங்கள் சேர்க்கப் பட்டன. அல்ஜீரியாவில் முதலிரவின்போது படுக்கை விரிப்பில் கறை படியவில்லை என்றால், பெண்ணை அவளது அப்பாவும், சகோதரர்களும் சேர்ந்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.

அமெரிக்காவில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த அகோமாவி பழங்குடிகள் மத்தியில் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. ஊரில் திருவிழா நடக்கும்போது கல்யாண வயசில் இருக்கும் பெண்களை அழைத்து நடனம் ஆடச் சொல்வார்கள். நடனம் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும். யாராவது ஒரு பெண் களைப்பில் விழுந்து விட்டால் போச்சு… ‘அவள் கல்யாணத் துக்கு முன்பே ஏதோ தப்பு செய்து விட்டாள். அதனால்தான் கன்னிப் பெண்களுக்கான நடனத்தை அவளால் நீண்டநேரம் ஆட முடியவில்லை’ என தீர்மானித்து அவளுக்கு நூறு கசையடி கொடுப்பார்கள். அடிக்கும், பழிச்சொல்லுக்கும் பயந்தே எல்லாப் பெண்களும் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள்.

எகிப்தில் கன்னித்திரையைக் கிழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. கணவனின் கிராமத்தில் பிரசவம் பார்க்கும் தொழிலைச் செய்து வரும் தாதிக்குதான் அந்த உரிமை. முதலிரவுக்கு முன்னால் பெண் இருக்கும் அறைக்கு இந்த தாதி போவார். ஒரு மெல்லிய பட்டுத் துணி யைச் விரலில் சுற்றிக் கொண்டு கன்னித் திரையைக் கிழிப்பார். ரத்தக் கறை படிந்த அந்தப் பட்டுத்துணியை அவர் வெளியில் கொண்டுவந்து காட்டினால் தான் முதலிரவே நடக்கும். கறை இல்லா விட்டால் அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும். இந்தக் காலத்தில் கூட தொடரும் நடைமுறை இது! (இந்த சம்பிரதாயத்தை வைத்து பல தாதிகள் சம்பாதிக்கிறார்கள். ஒருவேளை, துணியில் கறை படியாவிட்டால் பெண்ணு டன் ரகசியமாகப் பேரம் பேசுவார் தாதி. பணமோ, நகையோ பரிசாக வாங்கிக் கொண்டு கறையை வரவழைப்பார். எப்படி? இடுப்பில் ஒரு சுருக்குப் பையில் இதற்காகத் தயாராகக் கண்ணாடித்தூள் வைத்திருப்பார். துணியில் அதைத் தூவிவிட்டு பிறகு அதைக் கொண்டு கீறி ரத்தம் வரவழைப்பார். பெண்ணுக்கு வலி உயிர் போகும்தான்… ஆனால் வாழ்க்கையே போவதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை என தாங்கிக் கொள்வார்கள்!).

நவீன யுகத்தில்கூட பழைய சம்பிர தாயங்களைக் கைவிட பலர் மறுக்கி றார்கள். இராக் தலைநகர் பாக்தாத் போன்ற பெரிய நகரங்களில் ஆடம் பர ஹோட்டல்கள் ஏராளம். புதுமணத் தம்பதிகள் முதலிரவையும், தேனிலவை யும் கொண்டாட அலங்கரிக்கப்பட்ட அறைகள் இங்கு உண்டு. இந்த அறை களில் வந்து தங்கும் ஜோடிகள் அறையைக் காலி செய்த பிறகு, அறையை சோதித் தால் படுக்கை விரிப்பு மட்டும் காணாமல் போயிருக்கும். கறைபடிந்த அதைத் தங்கள் கிழட்டு உறவினர்களிடம் காண் பிக்க அந்தத் தம்பதிகள் பத்திரமாக எடுத்துப் போயிருப்பார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட சடங்குகள் எவ்வளவு குருட்டுத்தனமானவை என் பதைக் கன்னித்திரை பற்றிய அறிவியல் உண்மைகள் புரிய வைத்திருக்கின்றன.

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product
WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES
accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books
it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics