உயிர் பானம்

[wysija_form id=”1″]

மனித சமுதாயம் இரண்டுவிதமான தோற்றங் களைத்தான் இயல்பாகப் பார்க்கப் பழகி இருக்கிறது. ஒன்று ஆண்… இன்னொன்று பெண்! இந்த இரண்டு மாதிரியாகவும் இல்லாமல் ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழ முயலும் (இதேபோல பெண்ணாகப் பிறந்து ஆணாக வாழ முயலும்) குழப்பமான அடையாளங்களைக் கொண்டவர்கள், மூன்றாவதுவிதமான தோற்றம் கொண்டவர்கள். இவர்களை அறிவியல்பூர்வமாக ‘ட்ரான்ஸ் ஜெண்டர்’ ( Transgender ) என்கிறார்கள். இதற்குத் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. இந்த ட்ரான்ஸ் ஜெண்டர் என்பதை நான்கு ரகங்களாகப் பிரிக்கிறார்கள். இதற்கும் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. ‘அரவாணி’கள் என்று சமூகத்தில் அழைக்கப்படுபவர்கள், இந்த நான்கு ரகத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதுகூட அறிவியல்ரீதியில் எந்த அளவுக்குச் சரி என்று சொல்ல முடியாது. காரணம்… அரவாணி என்பதற்கு சரியான பொருள் என்ன என்பது இங்கே தெளிவுபடுத்தப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை.

சரி, நாம் அறிவியல் அடிப்படையில் மேலை நாட்டினர் பிரித்து வைத்திருக்கும் நான்கு ரகத்தினரையும் வரிசையாகப் பார்ப்போம்.

முதல் ரகத்தினர், ‘டிரான்வெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் செயல்பாடுகள் ‘டிரான்ஸ்வெஸ்டிஸம்’ எனப்படும். இவர்களுக்கு உடைகளை மாற்றிப் போட்டுக் கொண்டால்தான் செக்ஸ் உணர்வு எழும். மனைவியின் புடவையைக் கட்டினால்தான் ‘மூட்’ வரும். செக்ஸுக்கு முன்னதாகக் கட் டாயம் இப்படி அவர் உடை மாற்றிக் கொள்வார். அதன்பிறகே பரவசப்பட ஆரம்பிப்பார். இதுதவிர வேறெந்த குறையும் இருக்காது. இந்த உடை சிக்கல் தவிர மற்றபடி, ‘நான் இயல்பான ஆண்’ என்கிற உணர்வு இவர்களுக்கு இருக்கும். பெண்களிடம்தான் செக்ஸ் உணர்வு கொள்வார்கள். இதே குறைபாடு கொண்ட பெண்களுக்கு அப்படியே உல்டாவாக ஆண்களின் உடைமீது ஆசை வரும். அதுமட்டுமல்ல, செயல்களிலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.

இரண்டாவது ரகத்தினர் ‘டிரான்ஸ் செக்ஸுவல்கள்’. இவர்களது உடலும், உணர்வும் வேறுவேறாக இருக்கும். உடல்ரீதியாக இவர்கள் ஆணாக இருப்பார்கள். அதற்கான அடையாளங்களாக மீசை, தாடி, ஆணுறுப்பு எல்லாம் இருக்கும். ஆனால், மனோரீதியாகத் தங்களை பெண்ணாக உணர்வார்கள். ‘நான் பிறக்கும்போதே ஒரு பெண்தான்! ஆனால், கடவுள் ஏதோ ஞாபகத்தில் தப்பு செய்து விட்டார். என்னைக் கொண்டுவந்து இந்த ஆம்பளை உடம்பில் போட்டுவிட்டார்’ என நினைப்பார்கள். தன்னை அமுக்கிக் கொண்டிருக்கும் இந்த ஆண் உடம்பிலிருந்து விடுபட முயற்சிப்பார்கள். ஆணுறுப்பின் மீது வெறுப்பு வரும். பெற்றோர், சமூகம் என எல்லோரும் ஆணாகப் பார்த்தாலும் ‘நான் பெண்தான்’ என்ற உணர்வு இவர்களுக்கு ஆழமாக இருக்கும். இவர்களுக்கு சக ஆண்களைப் பார்த்தால்தான் செக்ஸ் உணர்வு வரும். பெண்களுடன் சகோதர பாவத்தில் பழகுவார்கள். இதன் காரணமாக ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டு பெண்ணாக முயற்சிப்பார்கள்.

இதேபோல பெண்ணாகப் பிறந்தவர்கள், ஆணாகத் துடிப்பார்கள். மார்பகங்களை அகற்றிவிட நினைப்பார்கள். மிகுந்த சிரமப்பட்டு ஆண் குறியையும் உருவாக்கிக் கொள்வார்கள். இந்த வகையினரில்… ஆணாகப் பிறந்து, பெண்ணாகத் துடிப்பவர்கள்தான் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆனால், இப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் இவர்கள் முழுமையான பெண்ணாகவோ… ஆணாகவோ ஆக முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.

மூன்றாவது ரகத்தினர், ‘இன்டர்செக்ஸ்’ (நம்மூரில் ‘அரவாணிகள் என்று அழைக்கப்படுபவர்களை இந்த ரகத்தினர் என்று சொல்லலாம். ஆனால், அறுதியிட்டுக் கூற முடியாது. அதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் இங்கே நடக்கவில்லை). பிறப்புக் கோளாறு காரணமாக ஆண் அல்லது பெண் ஜனன உறுப்புகள் பரிபூரணமாக வளர்ச்சி அடைந்திருக்காது. இந்த ரகத்தினரில் ஆண்களாக நினைக்கப்பட்டவர்களுக்கு, ஆண் குறி இருக்கும். ஆனால், அது முழுமையாக இருக்காது. கூடவே பெண் குறி போன்ற அமைப்பும் இருக்கும். முக்கியமாக விதை இருக்காது.

பெண்ணாக நினைக்கப்பட்டவர்களுக்கு… பெண் குறி முழுமையாக இருக்காது. பக்கத்தில் ஆண் குறி போன்ற முழுமை பெறாத அமைப்பு இருக்கும். முக்கியமாகக் கருப்பை இருக்காது.

இந்த ரகத்தினர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாகவே… அல்லது பெண்ணாகவோ மாறிவிட்டதாக சொல்வார்கள். ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை. செக்ஸ் உணர்வு என்பது அதன் மூலம் பரிபூரணமாகக் கிடைக்காது. கர்ப்பப் பை என்பது இல்லாததால் குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியாது. விதை இல்லாததால் தந்தையாகவும் முடியாது.

நான்காவது ரகத்தினர் ‘யூனக்’ என்று அழைக்கப் படுவார்கள் (கடந்த இதழில் அரவாணிகள்தான் ‘யூனக்’ என்றும் அதில் நான்கு ரகங்கள் உண்டு என்றும் தவறான தகவல் இடம் பெற்றுவிட்டது… ஸாரி). ஆண்கள் மட்டுமே இந்த ரகத்தில் உண்டு. விதை மற்றும் ஆண்குறியை வெட்டி எடுத்துவிடுவார்கள். இவர்கள் முழுமையான ஆண்கள்தான் என்றாலும் சூழல் காரணமாகக் குறியை வெட்டிக்கொள்கிறார்கள். இதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று… அந்தக் காலத்தில் அந்தப்புர பாதுகாப்புக்காக மன்னர்களால் இப்படி விதை மற்றும் ஆண் குறி நீக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டார்கள். இரண் டாவது காரணம், ஹோமோசெக்ஸ். இது சமுதாயம் ஏற்றுக்கொள்ளாத விஷயம் மட்டுமில்லை… சட்ட விரோதமும்கூட. மாட்டிக் கொண்டால் தண்டனை கிடைக்கும். இதற்கு பயந்து, விதை மற்றும் ஆண் குறியை வெட்டிக்கொள்வார்கள். மூன்றாவது காரணம்… குரல் வளம். பிறந்ததிலிருந்து இருக்கும் மென்மையான குரல், பருவ வயதை எட்டும்போதுதான் மாற்றம் அடையும். அதாவது ஆணாக இருந்தால் கரடு முரடாக மாறும்.

இப்படி மாறாமல் மென்மையான குரலே வேண்டும் என்பதற்காக விதை மற்றும் ஆண்குறியை வெட்டிக் கொள்வார்கள். அதாவது, ஹார்மோன் சுரந்தால்தான் பருவத்தை எட்ட முடியும். குறியை அகற்றிவிட்டால், ஹார்மோன் சுரப்பது குறைந்து… குரல் மாறாமல் அப்படியே இருக்கும்.

இப்படி வெட்டிக்கொள்வதன் மூலம் இவர்கள் பெண்ணாக முடியாது என்பது முக்கியமான விஷயம்! சரி.. சராசரி ஆணாகவோ… பெண்ணாகவோ பிறந்தவர்கள்… ‘டிரான்ஸ்வெஸ்ட்’ மற்றும் ‘டிரான்ஸ் செக்ஸுவல்கள்’ ஆகிய இரண்டு ரகங்களாக மாறக் காரணம்?