ஒரே தோட்டத்தில் நடப்படும் செடி

ஒரே தோட்டத்தில் நடப்படும் செடி, கொடிகள், மரங்கள் தங்கள் தாவர இனத்திற்கேற்ப மண்ணிலிருந்து சக்தி மூலங்கள் பெற்று வளர்கிறது. ஒவ்வொரு செடியின் உயிர் சக்தி சேமிப்பான காய் – கனி ஆகியவை அந்த தாவரத்தின் உயிரின தாதுக்கள் அடிப்படயில் உருவாகும் என்பதுதான் உயிரியல் விதி. கத்தரிக்காய் செடியில் ஆப்பிள் விளைவிக்க முடியாது என்பது தாவர உயிரியல் விதி. ஆனால் மனிதன் தன் ‘ சுய தகவமைப்பு சிந்தனை ( SELF CONSTRUCTED MIND ) மூலம் தன் அறிவாற்றலை உற்பத்தி செய்யலாம்.
கல்வி அமைப்பும், மாணவர்கள் தங்கள் விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் முறையும் பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை இது.

பள்ளி இறுதி தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே அளவு கோளாக கொண்டு மாணவர்களின் எதிர்கால தொழிற்கல்வி மற்றும் பிற கலை, அறிவியல், மருத்துவ கல்லூரி படிப்புகளை தேர்ந்தெடுப்பது சரியாக அமையுமா என இந்திய கல்வியியலாளர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது. காரணம் கல்லூரி கல்வி பயிற்சி பயின்று வருபவர்களின் ‘ திறன் பயன்பாட்டு முறை ‘ ( TALENTS APPLYING SKILL ) அகில இந்திய அளவில் மிகக் குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மாணவர்களாகவே தங்களுக்கு விருப்பமான கல்வியை தேர்தெடுப்பது எதிர்கால வேலைவாய்ப்பு , ஊதிய விகிதாச்சாரம், கல்வி கட்டணம் ஆகியவற்றை மட்டுமே வைத்து முடிவெடுத்து கல்லூரிகளில் சேருகிறார்கள். ஆனால் பௌதீக ரீதியாகவும் – உளவியல் அமைப்பு ரீதியாகவும், சமூக கலாச்சாரத்தில் உருவான மூளையின் கட்டமைப்பிற்கு தகுந்தாற்போல் கல்வியை தேர்ந்தெடுக்க பழகவில்லை. அல்லது தாங்கள் தேர்தெடுத்த கல்வி முறைக்கு தகுந்தாற்போல் தங்கள் செயல் மூளையை ( EXECUTION MIND ) தகுதி படுத்தகவும் இல்லை. அதனால்தான் கல்லூரி பயிற்சி முடிந்த பின் அவர்கள் அந்த திறனை முழு அளவில் பயன்படுத்த முடிவதில்லை.
தற்போது அகில இந்திய திறனாய்வு கழகம் ( ALL INDIA SKILL TEST INSTITUTION ), மாணவர்களுக்கான அறிவியல் – உளவியல் அடிப்படையிலான சுய பரிசோதனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதை முதலில் டெல்லி பல்கலைகழகத்தில் முதலாண்டு மாணவர்களிடத்தில் அறிமுகம் செய்தபோது, தாங்கள் தேர்தெடுத்த துறைக்கேற்ப தங்கள் தகுதி திறனாய்வு செய்து திறன் மேம்பாடு செய்து கொண்டனர். தற்சமயம் மேல் நிலைப் பள்ளி இறுதி தேர்வு எழுதியவர்கள் தங்கள் உளவியல் அமைப்புப்படி எந்த கல்லூரி பயிற்சியை தேர்தெடுக்கலாம் என திறனாய்வு செய்யலாம். அல்லது நீங்கள் தேர்தெடுத்த / விருப்பமான துறை தங்கள் சுய உளவியல் ( SELF CONSTRUCTED PSYCHOLOGY ) திறனோடு சமன்பாடாகிறதா என பரிசோதிக்கலாம். தாம் தேர்ந்தெடுத்த துறையில் தாம் சிறந்து பரிமாணம் அடைய இப்போதே திட்டமிடலாம்.

இந்த அறிவியல் – உளவியல் சார்ந்த முறையை அறிந்து கொள்ள எழுதுங்கள் :

editor@tamilagamtimes.com.