WHITE LIES

பொதுவாக, சூழ்நிலையை தற்காலிகமாக சமாளிக்க – நமக்கு விருப்பமில்லாத முடிவுகளை நாம் ஏற்பதை தவிர்க்க என பல சூழ்நிலைகளில் நம் மனம் தயார் நிலையில் வைத்திருக்கும் உண்மை வாக்கியங்களை தவிர்த்து , தற்காலிக மாற்று வாக்கியங்கள் உடனடியாக தயாரித்து உச்சரிக்கிறோம். பெரும்பாலும் விற்பனை / சந்தைப் உருவாக்க ( SALES / MARKETING EXECUTIVES ) பிரதிநிதிகள் / பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அரசியல்வாதிகள் / சேவை தொழிலில் இருக்கும் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் / சூழ்நிலைகளில் எழும் உறவு சிக்கல்களை சமாளிக்க என பலதரப்பட்டவர்களும் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை ‘ வெள்ளை பொய்கள் ‘ என பொருள் கொள்ளும் ‘ WHITE LIES ‘. அதன் சுய அர்த்தம், அடுத்தவர்களின் நன்மைகளை அதிகம் பாதிக்காத பொய்கள். ஆனால் , அந்த பொய்களை சொல்பவர்கள் அந்த பொய்களினால் எப்படியெல்லாம் பாதிக்க படுவார்கள் என அவர்கள் அறிவதில்லை. அப்போதைய சூழ்நிலைகளை அந்த சொற்கள் சமாளித்தாலும் அவைகள் நம்முள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன ? விஞ்ஞானப் பூர்வமாக அவைகள் ஏற்படுத்தும் உள்மன மாற்றங்களினால் நம் வாழ்வின் மற்ற வாழ்வியல் பகுதிகள் ( PART OF LIFE ) அடையும் பாதிப்புகள் என்ன ?

இவைகளை பற்றிய அதிக அக்கறை நாம் எடுத்துக்கொள்வதில்லை. காரணம், இவைகள் நமக்குள் ஏற்படுத்தும் உள்மன மாற்றங்கள் நமக்கு புரிவதில்லை. உதாரணமாக, நம்மில் பலரும் அறிந்திருக்கும் ஒரு அனுபவம் , ” நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் ? அந்த நேரத்தில் அப்படி ஏன் சொன்னேன் ? என இப்போது நினைத்தாலும் புரிவதில்லை ” என சொல்ல கேள்விப்பட்டிருப்போம் . அதற்கு காரணம், நாம் எப்போதோ நம் மூளையில் உருவாக்கியிருந்த ” வெள்ளை பொய்கள் ” உற்பத்தி மண்டலம்தான்.

அந்த நேரத்தில் அப்படி பேசி நடந்து கொள்ளவேண்டும் என்பது உன் விதிப்பலன் என ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ? அதன் விஞ்ஞான பகுப்பாய்வு இதுதான்.

நாம் சொல்லும் சூழ்நிலை பொய்கள் எப்படி நம்மை பாதிக்கின்றன ? நம்மை அறியாமல் நாம் எப்படி சூழ்நிலைகளில் அதற்கு அடிமையாகிறோம் ?