ஒரு நதியின் ஆன்மா …

A dried-up area of the Sagan River running through Konso, Ethiopia.

வசதியாய் வாழ்ந்து வடிந்த பெண்ணின் வாழ்வியல் தடம் – வற்றி போன நதியின் பாதையில் – ஆறாம் அறிவு கண்களில் தெரிகிறதா ?

தாய் பால் முதல் உணவு என்றால்; தாய் பாலின் முதல் மூலக்கூறு நான் என்பது அறிவீரா?

‘செல்பி’ யின்  முதல் வடிவம் நான் ; எப்படி தெரியுமா ? முதல் மனிதனின் முகம் காட்டியது நான் தான்;

நதியின்  நீரோட்டத்தில் முகம் கண்டு – காட்டு மிராண்டி முகத்திலிருந்து கலை முகம் ஆனான் !

ஏவாளின் முதல் ஈர்ப்பும் – இரண்டாம் மனிதனின் முதல் பிறப்பும் என்னால்தான் !

மனிதனுக்கு நான் தந்த முதல் ஊதியம் விவசாயம் – முதல் ஊதியம் மறந்த முதல் தலைமுறை மானுடன் நீ !

என் பெற்றோர் பெயர் H2 O –  வாயு இனத்தின் முக்கிய விகிதாச்சார குடிமகன்கள் – என் பெற்றோரையும் மாசாக்கி – என்னையும் காசாக்கிய முதல் நூற்றாண்டு மானுட தலைமுறை நீ!

முதல் விதை முளைப்பது என் தீண்டலில் ; முதல் மின்சாரம் பிறப்பது என் தீண்டலில் !

அறிவியல் காரணிகளின் அற்புதம் என்னிலும் உண்டுதெரியுமா ? பெண் தீண்டலில் மனிதனாகும் ஆண் பிறப்பு – என் தீண்டலில் மென்மையாகும் பாறைகள் !

ஓடும் நதியை உற்று நோக்கும் மன வளக் கலை உங்களுக்கு தெரியுமா ? நாளை கூறுகிறேன்…

ஆன்மாவின் அறைகூவல் தொடரும் …

எங்கள் முகநூல் குழுவில் இணைந்து ஆதரவு தர வேண்டுகிறோம்..

உங்கள் ஆதரவுடன் தாமிரபரணி நதி காப்போம் ! மீட்போம்.

எங்கள் முகநூல் குழுவில் இணைந்து ஆதரவு தர வேண்டுகிறோம்.

https://www.facebook.com/groups/363191934057249/