ஒரு நதியின் ஆன்மா…

ஓடும் நதியை உற்று நோக்கும் மனவளக்கலை தெரியுமா ?

ஓடும் நதியின் ஓவ்வொரு துளியிலும் – நதி ஒசையின் ஒலி கேட்கும் !

நதித் துளியின் ஒலியும் – மனதின் உள் ஒலியும் ஒரே சுரங்கள் என்பதினை அறிந்துள்ளீரா ?

உயிர் விவசாயம் செய்யும் , திரவ விவசாயி நான் !river1

நெல்மணியின் உயிர் திரவம் நான் ; மாங்கனியின் சுவை திரவம் நான் !

என் திரவ உடம்பின் பரம ரகசியம் தெரியுமா ?

இரு விசையும் – பல் சுவையும் கொண்ட பன்மொழி திரவம் நான்!

என் சுவையும் மண் சுவையும் கலந்த பன் சுவை திரவம் நான் !

இரு விசை – பிறப்பிடத்தின் உந்து விசை ( நதியின் தொடக்கம் ) கலப்பிடத்தின் ஈர்ப்பு விசை ( நதியின் கலப்பிடம் கடல் )

பெண்ணையும் – என்னையும் சேருமிடம் சேராமல் தடுக்கும் மானுட குணம் விந்தையல்லவா ?

மதுவின் மாயச்சுவை அறிந்த மானுடனுக்கு , நதிநீரின் ‘சுய சுவை’ மாண்பு தெரியுமா ?

என் ஆன்மாவின் அறைகூவல் தொடரும் …

Join with us https://www.facebook.com/groups/363191934057249/

Join with us https://www.facebook.com/RESIGNJOB/