மதிப்பிழந்த நிலங்கள் – VALUELESS LANDS

கோடிக்கணக்கான பணத்தை சேர்த்து உங்கள் மகள் / மகன் வசம் கொடுத்து – விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்று, உணவு பயிர் விளையாத – குடி நீர் ஆதாரமில்லாத ஊரில் குடியமர்த்தும் செயலை நீங்கள் எப்போதாவது செய்வீர்களா ? ஆனால், நாம் அனைவரும் நம்மையும் அறியாமல் நம் சந்ததிக்கு இதைத்தான் செய்ய காத்திருக்கின்றோம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்கள் நம் சந்ததிகளின் எதிர்கால வாழ்வை அழிக்கும் தன்மை உடையது என்றால், நாம் அதை மற்றவர்கள் நிப்பந்திக்காமலேயே புறக்கணிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் விழிப்புணர்வு செய்தும், சட்டம் இயற்றி கட்டாயப்படுத்தியும் நாம் இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லாமலேயே இருக்கிறோம் என்பது வேதனை.

நம் புவி வெப்பமாவதால் நம் வாழ்வியல் குணாதிசயங்கள் மாறும் – மிருகங்கள் உணவுக்காக இடம் பெயரும் – தாவர வளர்ச்சி விகிதம் குறையும் – மண் தன் வளம் இழக்கும் – உணவுப்பொருள் உற்பத்தி குறையும் – உயிர் வள சமன்பாடு குறையும் இவை யாவும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.

இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் வாடிக்கையாளர் பிரிமியம் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பணம் ஒதுக்கீடு செய்து அந்தந்த ஊரில் மரம் வளர்த்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டும்.

இவைகளிலிருந்து நம் தனிப்பட்ட வாழ்க்கை நேரிடையாக எப்படி பாதிக்கும் ? தொடர்ந்து எங்கள் இணையம் வாசியுங்கள் ;